🛕 Arulmigu Mahalakshmi Amman Temple

அருள்மிகு மகாலெட்சுமி அம்மன் திருக்கோயில், அம்மாசத்திரம் - 622504
🔱 Mahalakshmi

📜 About this temple

சிதம்பரம் அருகேயுள்ள நல்லினம் கிராமத்தில், சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு பூஜாரி இருந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவிலில் (மாணிக்கவாசகரை சிவன் ஆட்கொண்டு உருவமின்றி அருவமாய் இருக்கும் தலம்) வசித்து வந்தார். அவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. புகுந்த வீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்பெண் அங்கிருந்து கைக்குழந்தையான மகனுடன் வெளியேற்றப்பட்டாள். அவள் தான் வீட்டில் வைத்து வணங்கிய காமாட்சி அம்மன் திருவுருவத்துடன் தன் உடன்பிறந்தவர்கள் வசித்த காளையார்கோவிலுக்கு வந்தாள். இவ்வூர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. வரும் வழியில், அவள் சில குடுகுடுப்பைக்காரர்களைச் சந்தித்தாள். அவர்கள் அவள் ஊர் வரை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தனர். பின் னர் அவ்வூரிலேயே தங்கி விட்டனர். அவளது குழந்தை வளர்ந்து பத்து வயதை எட்டினான். விளையாடுவதற்காக தாயிடம் உடுக்கு ஒன்று வாங்கித் தரும்படி கேட்டான். அம்மாவும் மகனுக்கு அதை அன்புடன் வாங்கிக் கொடுத்தாள். அதை அடித்துக் கொண்டே சிறுவன் விளையாடிய போது, வீட்டில் சிலையாய் இருந்த அன்னை காமாட்சி அதை ரசித்துக் கேட்டாள். அதற்கு பரிசாக அக்குழந்தை உடுக்கடித்தபடியே எது சொன்னாலும், பலிக்கும் பாக்கியத்தை அவனோ, அவனது தாயோ அறியாவண்ணம் கொடுத்தாள். ""இந்த குழந்தை இவ்வளவு அழகாக குறி சொல்கிறானே! இவன் என்ன சொன்னாலும் பலிக்கிறதே, எல்லாம் அவனது அன்னை பூஜிக்கும் காமாட்சியின் மகிமை தான் என எண்ணினர். இதனிடையே காளையார்கோவிலை அச்சமயம் ஆண்ட மன்னரின் மனைவிக்கு நோய் ஏற்பட்டது. அரண்மனை வைத்தியர்கள் எவ்வளவோ முயன்றும், நோய் தீரவில்லை. தீர்க்க முடியாத அந்த நோய்க்கான காரணத்தை அறிய குடுகுடுப்பைக்காரர்களை மன்னர் வரவழைத்தார். அவர்கள் தங்கள் சக்தியைப் பயன்படுத்தி, சில காரணங்களைக் கூறினர். ஆனால், அவை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. அவர்கள் கூறிய காரணங்களின் அடிப்படையில், பரிகாரம் செய்தும் பலனில்லை. எனவே, மன்னர் குடுகுடுப்பைக்காரர்களை சிறையில் அடைத்து விட்டார். தன் தாயை சிறுவயதில் காப்பாற்றிய குடுகுடுப்பைக்காரர்கள் சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்த சிறுவன், அவர்களை வெளியே கொண்டு வர திட்டமிட்டான். அவன் நேரடியாக அரசனிடம் சென்று, காமாட்சியின் அருளுடன் நோய்க்கான காரணத்தையும், அது தீர்வதற்கான வழியையும் சொன்னான். நோய் குணமானது. மனம் மகிழ்ந்த

காமாட்சியம்மன் கோயிலில் சிவராத்திரி விழா சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).