🛕 Arulmigu Meenakshi Sundareswarar and Kalabairavar Temple

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் காலபைரவர் திருக்கோயில், துர்வாசபுரம், திருமயம் வட்டம் - 622409

📜 About this temple

விசுவாவஸூ என்ற கந்தர்வனின் மகள் வித்யாவதி. இவர் அம்பாளின் தீவிர பக்தை. இவள் மீனாட்சியின் அம்சமும், கல்வியின் நாயகியுமான சியாமளாதேவியை தன் மகளாகக் கருதி வழிபட்டு வந்தாள். அவளது பக்தியை மெச்சி காட்சியளித்தாள் சியாமளா. வித்யாவதி அவளிடம், அம்மா! உன்னை மகளாகக் கருதி வழிபட்டேன். உண்மையிலேயே நீ எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும், என்று வேண்டினாள். அவளது வேண்டுதல் அடுத்த பிறப்பில் நிறைவேறும் என அம்பாள் வாக்களித்தாள். அதன்படி வித்யாவதி, சூரசேனன் என்ற மன்னனுக்கு மகளாகப் பிறந்து, மதுரையை ஆண்ட மலையத்துவஜ பாண்டியனை மணந்து கொண்டாள். குழந்தைப்பேறு இல்லாத மன்னன், ஒரு யாகம் நடத்தினான். அதில் அம்பிகை மூன்று வயது சிறுமியாகத் தோன்றினாள். கலைகளை கற்றுத்தேர்ந்த அவளிடம், மதுரையை ஆளும் பொறுப்பைக் மன்னர் கொடுத்தார். மீன், தன் குஞ்சுகளுக்கு கண்களாலேயே உணவு கொடுப்பது போல், தன்னை வேண்டும் பக்தர்களுக்கு கருணைக் கண் பார்வையாலேயே அருள் செய்ததால் இவள் மீனாட்சி என்று பெயர் பெற்றாள். நல்லாட்சி நடத்திய மீனாட்சி, திக்விஜயம் சென்றபோது கயிலாயத்தில் சிவனைக் கண்டாள். அவளை மணக்க, சிவன் மதுரைக்கு வந்தார். திருமணத்திற்கு பின்பு, மதுரையை ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மதுரை மீனாட்சி தங்கள் பகுதியிலும் அருளாட்சி புரிய வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் 500 ஆண்டுகளுக்கு முன் பக்தர்களால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சிறிய அளவில் கட்டப்பட்டது. 66 ஆண்டுகளுக்கு முன் இதை ஓரளவு பெரிய அளவில் கட்டினர்.

மார்ச் 19ல் இருந்து 21 வரை சிவலிங்கம் மீது சூரிய ஒளிபட்டு பிரகாசிக்கும்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).