🛕 Arulmigu Muthumariamman Temple

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவப்பூர், புதுக்கோட்டை வட்டம் - 622002
🔱 Muthumariamman

📜 About this temple

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், பூமியில் புதைந்துகிடந்த முத்து மாரியன்னை, பூசாரி ஒருவரின் அருள்வாக்கில் வெளிப்பட்டாள். அருள் வாக்கின்படி, அம்மனின் திருவருவை பூமியிலிருந்து தோண்டி எடுத்து பச்சைக் கூடாரத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். அந்த சமயத்தில், புதுக்கோட்டை மாவட்டம் மன்னருக்குச் சொந்தமானதாய் இருந்ததால், சமஸ்தானமாக பெரும்புகழோடு விளங்கியது. பொருளாதார செலவாணிக்காக அம்மன் காசு அடித்து தனியாக நிர்வாகம் செய்த திறமையும், அந்தஸ்தும் புதுக்கோட்டைக்கே உரியதாக இருந்தது. புதுக்கோட்டையை அப்போது ஆண்டு வந்த மன்னரின் மகனுக்கு கடுமையான அம்மை நோய் கண்டு, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. மன்னர், முத்துமாரி அம்மன் ஆலயம் வந்து, தனது மகனைக் காப்பாற்றித் தருமாறு மன்றாடினார். ஆனால், விதிப் பயன் காரணமாக அரசரின் மகன் மரணமடைந்தான். மன்னர் ஆத்திரத்திலும் அதிர்ச்சியிலும் தன் நிலை மறந்தார். அம்பாளை அந்த இடத்தில இருந்த வேறு இடம்மாற்ற உத்தரவிட்டார். அரசரின் ஆணைப்படி, சுவாமி சிலையை வேறு இடம் கொண்டு செல்லுகையில், திருவப்பூர் மக்கள் சிலர் வழிமறித்துக் கெஞ்சி, அம்பாளை மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்தனர். (அந்த இடம் தற்போது காட்டு மாரியம்மன் கோவில் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது). அன்று இரவு, அரசரின் கனவில் முத்துமாரி தோன்றி, உனது மகன் விதிவசத்தால் உன்னை விட்டுப் பிரிந்தாலும், அவனை எனது மகனாக ஏற்றுக் கொண்டேன் எனக் கூறினாள். தவறை உணர்ந்த மன்னர், அம்மனை முன்பு இருந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவிட்டார்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், பூமியில் புதைந்துகிடந்த முத்து மாரியன்னை, பூசாரி ஒருவரின் அருள்வாக்கில் வெளிப்பட்டாள் என்பது சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).