🛕 Arulmigu Pasupatheeswarar Temple

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், குலமங்கலம், திருமயம் வட்டம் - 622412
🔱 Pasupatheeswarar

📜 About this temple

1920ம் ஆண்டுகளில் வாகனவசதி குறைவு. திருமயத்தைச் சுற்றியிருந்த கிராம மக்கள் திருமயத்துக்கு வர மாட்டு வண்டிகளை பயன்படுத்தினர். அவர்கள் வரும் வழியில் பாம்பாறு குறுக்கிட்டது. சில சமயங்களில் வண்டிகள், ஆற்று சேற்றில் சிக்கி மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்றுவிடும். இதனை பயன்படுத்திக் கொண்டு ஈச்சங்காட்டில் மறைந்திருந்த திருடர்கள், பெண்களிடமிருந்த நகைகளைக் கொள்ளையடித்து சென்றனர். இதுபற்றிய தகவல் திவான் பகதூர் முத்தையா செட்டியாருக்கு சென்றது. பாம்பாற்றின் குறுக்கே தனது சொந்தச்செலவில் பாலம் ஒன்றை கட்டி வண்டிகள் செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தார். பாலத்தின் அடியில் மறைந்திருந்த திருடர்களின் குற்ற செயல்களைத் தடுக்க, தன் தாயார் பெயரில் உமையாள்புரம் என்ற ஊரை ஏற்படுத்தினார். மக்கள் நடமாட்டம் அதிகமானால் திருடர் பயம் குறையும் என்பது அவரது நம்பிக்கை. ஒரு குளம் வெட்டி, தண்ணீர் பந்தல் அமைத்ததுடன், விநாயகர் கோயில் ஒன்றும் கட்ட முடிவு செய்தார். அப்போது அவ்வூருக்கு காஞ்சிப்பெரியவர் விஜயம் செய்தார். சிவாலயம் ஒன்றை அங்கு அமைத்து விநாயகரையும் பிரதிஷ்டை செய்யுமாறு அறிவுறுத்தினார். விநாயகர் கோயிலில் சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளை அமைத்து 1929லிருந்து இன்று வரை வழிபாடுகள் நடந்து வருகிறது. காஞ்சிப்பெரியவரின் ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் என்ற நூலில், திவான் பகதூர் முத்தையா செட்டியார், பூஜைகளுக்கு செய்த நற்பணிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள அம்மன் மங்களாம்பிகை மேற்கு நோக்கி அருள்பாலிப்பதும், அம்மனுக்கு செம்பருத்தி மாலை, கிரீடம் படைத்து வழிபடுவதும் சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).