📜 About this temple
உலகெங்கும் லிங்கவடிவில் அருள்பாலிக்கும் சிவபெருமான் குடுமியான்மலையிலும் எழுந்தருளினார். "குடுமியான்' என்றால் "உயர்ந்தவன்' என்றும், "குடுமி' என்றால் "மலையுச்சி' என்றும் பொருள்படும். உயர்ந்தமலையை ஒட்டி இவர் கோயில் கொண்டதால் இவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம். இக்கோயிலில் பணிபுரிந்த அர்ச்சகர் ஒருவருக்கு காதலி ஒருத்தி இருந்தாள். இவள் தினமும் சிவனை வழிபட வருவாள். அர்ச்சக காதலருடன் சிறிதுநேரம் பேசிவிட்டு செல்வாள். ஒருநாள் காதல் மோகத்தில் இருவரும் தங்களை மறந்து பேசிக் கொண்டிருக்க, அப்பகுதி அரசர் முன்னறிவிப்பின்றி கோயிலுக்கு வந்துவிட்டார். அர்ச்சகர் அதுவரை இறைவனுக்கு பூ கூட போடவில்லை. பதட்டமடைந்த அவர், இனி பூத்தொடுத்து இறைவனுக்கு சூட்டுவதற்கு கால அவகாசமில்லை என்பதை உணர்ந்து, தன் காதலியின் தலையிலுள்ள பூவை எடுத்து லிங்கத்திற்கு அவசரமாக சூட்டிவிட்டார். அரசர் வந்தார். பூஜை முடிந்து அப்பூவை பிரசாதமாக அரசரிடம் அர்ச்சகர் கொடுத்தார். அதில் தலைமுடி இருந்தது. கோபமடைந்த அரசர் அதுபற்றி அர்ச்சகரிடம் விசாரிக்க, என்ன செய்வதென அறியாத அர்ச்சகர் கணநேரத்திற்குள், ""இறைவா! மாட்டிக் கொண்டேனே! உனக்கு இதுகாலம் வரை தவறாமல் சேவை செய்தேன். இன்று காதல் மோகத்தில் சிக்கி, அறியாமல் தவறிழைத்து விட்டேன். என்னைக் காப்பாற்று,'' என மனதிற்குள் வேண்டினார். இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு, ""அரசே! லிங்கத்தின் தலையில் குடுமி இருக்கிறது. அதிலுள்ள முடி ஒட்டிக் கொண்டிருக்கிறது,'' என்றார் அர்ச்சகர். இதை அரசர் நம்பவில்லை. ""பொய் சொல்லாதே,'' என கர்ஜித்தவர், லிங்கத்தின் அருகே சென்று பார்த்தார். என்ன ஆச்சரியம்! கருணைக்கடலான சிவனின் தலையில் ஒரு குடுமி இருந்தது. அரசர் ஆச்சரியப்பட்டார். அர்ச்சகரும், அவரது காதலியும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். விரைவில் அவர்களுக்கு திருமணமும் நடந்தேறியது.
இது ஒரு சனித் தலம் ஆகும். மலை உச்சியில் நாயன்மார்கள்: நாயன்மார்கள் அறுபத்துமூவரின் சிலைகளை பொதுவாக பிரகாரங்களிலேயே காணமுடியும். ஆனால், இக்கோயிலில் மலை உச்சியில் சிற்பமாக வடித்துள்ளனர். நாயன்மார்கள் சிலை முடியும் இடத்தில் விநாயகர் சிலை வைப்பது மரபு. ஆனால், இங்கு ரிஷபத்தில் அமர்ந்த சிவபார்வதி நடுவில் இருக்க, நாயன்மார்கள் இருபுறமும் இருப்பது சிறப்பான அம்சம். இத்தகைய அமைப்பை தமிழகத்தில் வேறெங் கும் காணமுடியாது. கோயில் பிரகாரம் சுற்றி வரும்போது, இந்தச் சிற்பங்களை மலையுச்சியில் ஏறாமல், கீழிருந்தபடியே தெளிவாகப் பார்த்து தரிசிக்க முடிகிறது.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).