📜 About this temple
திருவரங்குளம் ஒரு காலத்தில் காடாக இருந்தது. அந்தக் காட்டில் வேடன் ஓருவன் தன் மனைவியுடன் வசித்து வந்தான். ஒருமுறை உணவு தேடச் சென்ற அந்த வேடுவச்சியைக் காணவில்லை. நீண்டதூரம் சென்றும் உணவு கிடைக்காத அவள், திரும்பி வரும் வழியை அறிய முடியாமல் தவித்தாள். அவளை ஒரு முனிவர் கண்டார். பத்திரமாக அவளை வேடனிடம் ஒப்படைத்தார். அவர்களது வறுமை நிலையைக் கண்ட அவர் ஒரு பனைமரத்தை அவர்கள் அறியாமலே படைத்து விட்டு சென்று விட்டார். அந்த மரத்திலிருந்து தினமும் ஒரு பொற்பனம்பழம் கீழே விழுந்தது. இதை எடுத்த வேடன், ஊருக்குள் வந்து ஒரு வணிகரிடம் கொடுப்பான். அதன் உண்மை மதிப்பை அறியாத அவனிடம், வணிகர் ஏதோ சிறிதளவு பொருளை மட்டும் கொடுப்பார். அதைக் கொண்டு உணவு சமைத்து அவன் காலத்தை ஓட்டி வந்தான். இப்படியே 4420 பழங்களை விற்று விட்டான். வணிகரோ பெரும் பணக்காரராகி விட்டார். வணிகரின் அபரிமிதமான வளர்ச்சி கண்ட வேடனுக்கு சந்தேகம் ஏற்பட்டு சிலரிடம் விசாரிக்க, பல்லாயிரம் பணம் மதிப்புள்ள பொற்பனம் பழங்களை, வெறும் உணவுக்கு விற்றது கண்டு வருந்தினான். வணிகரிடம் தனக்குரிய பங்கைக் கேட்டான். அவர் மறுத்து விட்டார். வேடன் மன்னரிடம் புகார் செய்தான். பொற்பனை பற்றி கேள்விப்பட்ட மன்னன் தன் ஏவலர்களை அனுப்பி அம்மரத்தை பார்த்து வர ஆணையிட்டான். அங்கோ மரமே இல்லை. அதற்கு பதிலாக ஒரு லிங்கம் காணப் பட்டது. இவ்விடத்தில் ஒரு கோயில் கட்ட தீர் மானித்தான். இதைக் கேள்விப் பட்ட வணிகரும், இறைவனால் இப்பொருள் வேடனுக்கு அருளப் பட்டது என்பதையறிந்து அவனிடமிருந்து பெற்ற பொற்பனம் பழங்களில் 1420 ஐ விற்று ஒரு கோயில் எழுப்பினார். மீதி 3000 பழங்களை கோயில் அறை ஒன்றில் பூட்டி வைத்தார். அப்பழங்கள் இவ்வூரிலேயே புதைந்து கிடக்கும் என இவ்வூர் மக்கள் இப்போதும் நம்புகின்றனர்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).