📜 About this temple
ராமாயண யுத்தத்தில் ராவணனை வதம் செய்து சீதா பிராட்டியை மீட்டு வரும் வழியில் ராமேஸ்வரத்தில் தங்கினார் ராமன். அப்போது யுத்தத்தில் தனது சடைமுடியில் தோய்ந்திருந்த அரக்கர்களின் ரத்தத் துளிகளை சுத்தம் செய்து நீராடி, பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற நீர்த்தடாகமே ஜடாமகுட தீர்த்தமாக விளங்கி வருகிறது. வியாசரின் மகனாகிய சுகர் எத்தனையோ யாகங்களையும், வேள்விகளையும் வேதமந்திர பாராயணங்களையும் செய்தும் தவயோக ஞான சித்திகளை அடைய முடியாமல் கவலையுடன் வியாசரிடம் சென்றார். வியாசரும், சுகரின் நிலை அறிந்து ராஜரிஷியாகிய ஜனகரிடத்தில் அனுப்பி வைத்தார். ஜனக மகரிஷி சகல சிவயோக சித்திகளும் உண்டாக வேண்டும் என்றால் ராமேஸ்வரத்தில் ராம பிரானால் உருவாக்கப்பட்ட, ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடிவர நீ சித்தி அடையலாம் என்று உபதேசித்தார். சுகரும் அவ்வாறே, ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி அங்கு தியான லிங்கமூர்த்தியாகத் திகழ்ந்த ராமநாத சுவாமியை வழிபட்டு ஞானியானார். கொடுங் கோபியாகிய துர்வாச மகரிஷியும், சாந்த சீலராகிய பிருகு மகரிஷியும் வெவ்வெறு காலங்களில் புனித நீராடி அரிதான யோக சக்திகளைப் பெற்ற சிறப்புடையது ஜடாமகுட தீர்த்தம். தவநெறியில் நிற்போரான ரிஷிகள், மகான்களால் உருவாக்கி பூஜிக்கப்பட்ட ராமநாத சுவாமியே, ஜடாமகுட தீர்த்தக் கோயிலில் தியான லிங்க மூர்த்தியாக விளங்குகிறார். இத்தீர்த்தம் காமம், குரோதம், மோகம் என்னும் மயக்கங்களில் இருந்து மனிதர்களை விடுபடச்செய்கிறது.
மகம் நட்சத்திரம் வரும் எல்லா நாட்களிலும் புண்ணிய தீர்த்தக்கரையான ராமேஸ்வரம் ஜடா மகுட தீர்த்தத்தில் நீராடினால், மகாமக குளத்தில் 12 மகாமகங்கள் நீராடிய பலன் கிட்டும்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).