📜 About this temple
ராமபிரான், லட்சுமணனுடன் சீதா பிராட்டியை தேடி இவ்வழியே இலங்கைக்கு சென்றார். அப்போது, இங்கு சற்றுநேரம் இளைப்பாறினார். அவருக்கு தாகம் எடுக்கவே, வருணபகவான் ஒரு தீர்த்தம் உண்டாக்கி கொடுத்தார். அந்த நீரைப் பருகிய ராமபிரான் மனம் மகிழ்ந்தார். ராமபிரான் வந்திருப்பதை அறிந்த அகத்திய முனிவர் இங்கு வந்தார். ராவணன் சீதையை சிறையெடுத்து சென்றதால் ராமனின் மனம் புண்பட்டுள்ளதை அறிந்த அகத்திய மாமமுனிவர் ராமனுக்கு ஒரு யோசனை சொன்னார். ""ராமா! ராவணன் சிறந்த சிவ பக்தன். ஆகையால் சிவன் அருள்பெற்றால் தவிர அவனை வெல்லமுடியாது. நீ இங்கே குடிகொண்டிருக்கும், என்றும் பழம்பதிநாதராகிய, சகலதீர்த்தமுடையவரை ஐந்து முறை வணங்கிச்செல். வெற்றி கிடைக்கும்,'' என கூறினார். அவ்வாறே ராமபிரான் வழிபட சிவபெருமான் தேவியுடன் காட்சியளித்தார். உடனிருந்த வருணன் இந்த அரிய நிகழ்ச்சியை பார்த்து ஆனந்தப்பட்டார். இறைவனை அதே இடத்தில் கோயில் கொண்டருளவும், ராமபிரான் தாகம் தீர்த்த வருணதீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வணங்குபவர்களுக்கு மோட்சம் அளிக்க வேண்டும் எனவும் வேண்டினார். சிவபெருமானும் மேற்கு முகமாக எழுந்தருளினார். சகலதீர்த்தமுடையவர், சர்வதீர்த்தேஸ்வரர் என்ற பெயர்களுடன் சுவாமி பெயர் விளங்குகிறது. தேவியின் திருப்பெயர் பெரியநாயகி அம்மன். ராமபிரான் நீர் வேட்கையை தீர்த்ததால் தீர்த்தாண்டதானம் என அழைக்கப்படுகிறது.
மேற்கு நோக்கிய தலம்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).