🛕 Arulmigu Alagirinathaswamy Temple

அருள்மிகு அழகிரிநாதசுவாமி திருக்கோயில், கோட்டை, சேலம் - 636001
🔱 Alagirinathaswamy

📜 About this temple

மகாவிஷ்ணு, வைகுண்டத்தில் மகாலட்சுமியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவரைக்காண பிருகுமுனிவர் வந்தார். முனிவரை கவனித்தாலும் கவனிக்காதது போல் நடித்த விஷ்ணு லட்சுமியுடன் பேசிக்கொண்டே இருந்தார். தன்னை விஷ்ணு அவமதிக்கிறார் என்றெண்ணிய முனிவர், கோபம்கொண்டு அவரை உதைக்க சென்றார். தனது கண்முன்னேயே கணவரின் நெஞ்சில் முனிவர் உதைக்க வருவதைக்கண்டு வெகுண்ட மகாலட்சுமி கோபித்துக்கொண்டு சென்றார். பொறுமையுடன் இருந்த விஷ்ணு, முனிவரின் அகங்காரத்தை குறைக்க எண்ணி, முனிவரின் பாதத்தில் இருந்த ஞானக்கண்ணை பறித்து அவரது சக்தியை இழக்கச் செய்தார். தவறை உணர்ந்த பிருகுமுனிவர், தன்னை மன்னிக்கும்படி நாராயணனிடம் வேண்டினார். கோபித்துக் கொண்டு சென்ற தாயாரை எண்ணி தவம் செய்து வணங்கிவர, மன்னிப்பு கிட்டும் என்றார் விஷ்ணு. அதன்படி இத்தலத்துக்கு வந்த முனிவர் அங்கு தவமிருந்தார். ஒருநாள் வில்வமரத்தினடியில் யாருமில்லாமல் தனியே அழுதுகொண்டிருந்த குழந்தையைக் கண்டார். மிகவும் அழகாக இருந்த குழந்தைக்கு "சுந்தரவல்லி' எனப்பெயரிட்டு வளர்த்தார். அவள் பருவ வயதை அடைந்தபோது, அவளை மணமுடிக்கும் தகுதி இறைவனுக்கு மட்டுமே உள்ளது என உணர்ந்த அவர், மகாவிஷ்ணுவை வேண்டினார்.அழகியநாதராக வந்த மகாவிஷ்ணு, சுந்தரவல்லியை திருமணம் செய்து கொண்டார். பின், முனிவர் வளர்த்து வந்த குழந்தைதான் மகாலட்சுமி என உணர்த்திய விஷ்ணு, தாயாருடன் காட்சி தந்தார். தாயார் அவரை மன்னித்தார். தனக்கு திருமணக்காட்சி தந்து அருளியதைப்போல இங்கு வரும் மக்களுக்கும் அருள வேண்டுமென அவர் வேண்டியதால், இருவரும் இங்கு தங்கிவிட்டனர்.

சுவாமிக்கு எதிரில் பக்தஆஞ்சநேயராக 8 அடி உயரத்தில் தனிச்சன்னதியில் அருளுகிறார்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).