🛕 Arulmigu Arunachaleshwarar Temple

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், அப்பமசமுத்திரம் - 636108
🔱 Arunachaleshwarar

📜 About this temple

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த குறுநில மன்னர்கள் இருவர் சிவன் மீது அதீத பக்தியுடையவர்களாக இருந்தனர். இவர்கள் பிரதோஷ வேளையில், விருத்தாச் சலத்திலுள்ள விருத்தாசலேஸ்வரரை தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒருசமயம் அவர்கள் பிரதோஷ பூஜைக்கு சென்றபோது கனத்த மழை பெய்தது. வழியில் இருந்த ஸ்வேத (குடமுருட்டி) நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அவர்களால் நதியை கடக்க முடியவில்லை. "பிரதோஷ நேரம் கழிவதற்குள் உன்னை தரிசிக்க வேண்டுமே இறைவா' என அவர்கள் சிவனிடம் முறையிட்டு வருந்தினர். அப்போது நதி இரண்டாக பிரிந்து வழிவிட்டது. பின்பு, விருத்தாச்சலம் சென்ற அவர்கள் சுவாமியை தரிசித்துவிட்டு திரும்பி விட்டனர். அடுத்த பிரதோஷ பூஜைக்கு கோயிலுக்கு சென்றபோதும், இதேபோல நிகழ்ந்தது. அன்றும் அவர்கள் சிவனைப் பிரார்த்தித்தனர். ஆனால், நதியில் வெள்ளம் வற்றவில்லை. அவர்கள் வருந்தி நின்ற வேளையில் அசரீரி ஒலித்தது. ""நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். உங்கள் பிரதோஷ தரிசனம் எவ்வகையிலும் தடைபடாது. இந்த ஆற்றின் கரையிலுள்ள வன்னிமரத்தின் அடியில் நான் சுயம்புவாக இருக்கிறேன். என்னை அங்கேயே வந்து வழிபடலாம்,'' என்றது. அவர்கள் மகிழ்ச்சியுடன் வன்னிமரத்தடியில் பார்த்தபோது, சுயம்புலிங்கத்தை கண்டனர். அங்கேயே கோயில் எழுப்பினர். சுவாமிக்கு "விருத்தாச்சலேஸ்வரர்' என்றே பெயர் வைத்து விட்டனர்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்திலுள்ள தூண்களை தட்டினால் வெண்கலத்தை தட்டுவது போல ஒலி வரும். இக்கோயிலின் தெற்கு பிரகாரத்திலுள்ள பாதாளத்தில் 14 படிகள் இறங்கினால், "பாதாள கணபதி'யை தரிசிக்கலாம். இது ஆந்திரமாநிலம், காளஹஸ்தியிலுள்ள அமைப்பை போல் உள்ளது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).