🛕 Arulmigu Ruthra Kodieswarar Temple

அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் சுவாமி, Sv Mangalam, Sv Mangalam - 630501
🔱 Ruthra Kodieswarar

📜 About this temple

ஒரு யாகம் நடத்துவது தொடர்பான பிரச்னையில் பிரம்மா, கோபக்கார முனிவரான துர்வாசரின் சாபத்திற்கு ஆளானார். சாபவிமோசனம் பெற பல இடங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபட்டு வந்தார். ஓரிடத்தில், ஆங்கீரசர் எனும் முனிவர் தவம் செய்து கொண்டிருந்ததை கண்டார். அவரது ஆலோசனையின்படி, அந்த இடத்தில், சிவனை பிரதிஷ்டை செய்து வணங்கி சாபம் நீங்கப்பெற்றார். கலைமகளை இவ்விடத்தில் சிவனை சாட்சியாக வைத்து திருமணம் செய்தார். அவரது திருமணத்திற்கு வந்த கோடி ருத்திரர்கள் வந்தனர். இவர்கள் சிவனின் அம்சங்கள். பிரம்மாவால் படைக்கப்பட்ட இந்த ருத்ரர்களுக்கு அழிவு என்பதே கிடையாது. பிரம்மாவுக்கு படைப்புத் தாழிலில் இவர்கள் உதவி செய்வார்கள். கோடி ருத்ரர்களும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து பூஜித்தனர். கோடி ருத்ரர்களும் வணங்கிய இந்த லிங்கத்திற்கு, "ருத்ர கோடீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.

வருடந்தோறும், ஆவணி, மாசி ஆகிய மாதங்களில் சுவாமி மீது ஒருவாரம் வரையில் சூரியன் தனது ஒளிக்கற்றையைப் பரப்பி பூஜை செய்கிறார். இத்தலத்தில் பிரம்மா மலை வடிவில் அருள்பாலிக்கிறார்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).