📜 About this temple
கவிகால ருத்ரர் என்ற புலவர் திருமால் பக்தராக விளங்கினார். பெருமாள் அவரது கனவில் தோன்றி, அடியெடுத்துக் கொடுத்து பாடும்படி அருள்புரிந்தார். புலவர் பெருமாளிடம், அவ்விடத்தில் தங்கும்படி வேண்டிக்கொண்டார். பெருமாளும் அங்கே தங்கினார். பாண்டிய மன்னன் ஜடாவர்ம குலசேகரன் கோயில் நிர்மாணித்தான். சுந்தரராஜப் பெருமாள் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. காலவெள்ளத்தில் கோயில் சிதிலமடைந்தது. பத்தாண்டுகளுக்கு முன் மீண்டும் கோயில் கட்டப்பட்டது. ஒரு முறை இப்பகுதியை ஆண்ட மன்னனின் மனைவிக்கு முதுகில் ராஜபிளவை என்ற கொடிய நோய் ஏற்பட்டது. மன்னன் பல வைத்தியர்கள் மூலம் குணப்படுத்த முயன்றும் முடியவில்லை. இதையறிந்த இங்கு வசித்த வேதமூர்த்தி அவர்கள் மன்னரிடம் சென்று தான் இந்த நோயை குணப்படுத்துவதாக கூறினார். இதைக் கேட்டு மகிழ்ந்த மன்னன், அப்படி குணமாகி விட்டால் இந்த கிராமம் முழுவதையும் பரிசாக அளிப்பதாக கூறினான். அத்துடன் அந்த பரிசை பெற 2008 அந்தணர்கள் நேரில் வர வேண்டும் என்ற நிபந்தனை விதித்தான். ஆனால் இங்கு 2007 அந்தணர்கள் மட்டுமே இருந்தனர். இவர்களுக்கு உதவ இங்குள்ள குளக்கரையில் அமர்ந்திருக்கும் விநாயகர் 2008வது அந்தணராக மாறி இவர்களுடன் சேர்ந்து இக்கிராமத்தை பரிசாக பெற்றனர். இதனால் கோபமடைந்த மன்னன் மனைவியின் தம்பி நோயை குணப்படுத்தி விட்டு செல்லும் வழியில் வேதமூர்த்தியை விரட்டி வெட்டினான். அப்பொழுது வேதமூர்த்தி உயிருடன் மண்ணில் பாய்ந்து விட்டார். இதனால் வேதமூர்த்தி அவர்களின் காலை மட்டும் வைத்து வேம்பத்தூர் அருகில் உள்ள வயல் வெளி நடுவில் கோயில் கட்டி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
சுதையாலான பிரம்மாண்ட திருமேனி
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).