📜 About this temple
இருபத்தேழு நட்சத்திர தேவதையர்களின் கணவனான சந்திரன், ஒரு முறை தனது ஊழ்வினை காரணமாக ரோகிணியின் மீது மட்டும் கூடுதலான அன்பு காட்டி பிற மனைவியரைப் புறக்கணித்து வந்தான். இதனால் மற்ற மனைவியர் அனைவரும் மிகுந்த துன்பமுற்று, தம் கணவன் சகோதரி ஒருத்தியிடம் மட்டும் அன்பு காட்டி வருவதை தங்களது தந்தை தட்சனிடம் முறையிட்டனர். இதனால் கடும்கோபங்கொண்ட அவன், தனது தவ வலிமையால் சந்திரனுக்கு சயரோகம் (தொழுநோய்) பீடிக்கும் படி சாபம் கொடுத்தான். இதனால் சந்திரன் சயரோக நோயினால் பாதிக்கப்பட்டு நாள்பட அவனது கலைகள் சிறிது சிறிதாக தேயத்தொடங்கின. இதனால் அச்சமுற்ற சந்திரன் தனது சாபம் நீங்கி பழைய பொலிவு பெற்றிட அகத்தியரிடம் வழி கேட்டான். அவர் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் நதியின் மேற்கு கரையில் அமைந்த வில்வவனத்தில் அருட்காட்சி தரும் லிங்கத்திற்கு தனியே கோயில் எழுப்பி பூஜிக்க அவனது பிணி தீர்ந்து பழைய நிலை கிட்டும் என கூறி அருளினார். தற்போது கோயில் வீற்றிருக்கும் பகுதியில் அகத்தியர் கூறியது போல லிங்கம் அமைந்திருப்பதைக் கண்ட சந்திரன் பெருமகிழ்வுற்று தனியே தீர்த்தம் ஒன்றினை அமைத்து அத்தீர்த்தத்திலும், வைகையிலும் நீராடி சிவனை மனம் உருகி தனது கலையினால் தொடர்ந்து பூஜித்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வந்தான். அவனது பக்தியில் அகம் மகிழ்ந்த சிவபெருமான் அருட்காட்சியளித்து, அவனது நோயைப் போக்கி அருளினார். மேலும், சந்திரனின் வேண்டுகோளை ஏற்று அவரே இத்தலத்தில் உமையவள் ஆனந்தவல்லியுடனாய சோமநாதராக காட்சி தருகிறார். பிற்காலத்தில் இந்த கோயில் பிரளயத்தால் அழிந்திட இறைவனின் அருட்கட்டளைப்படி ஸ்தூலகர்ண மகாராஜா மீண்டும் இக்கோயி்லை புதுப்பித்துக் கட்டினார்.
இங்கு சிவன் வெள்ளை சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).