🛕 Arulmigu Aadhi Kumbeswaraswamy Temple

அருள்மிகு ஆதி கும்பேசுவரசுவாமி திருக்கோயில்

📜 About this temple

கும்பகோணம் ஒரு காலத்தில் மாலதிவனமாக இருந்தது. மாலதி என வழங்கப்படும் மரங்கள் அடர்ந்திருந்தன. உதயகிரியில் நிசாசரா என்ற தபஸ்வி வசித்தார். அவரது மகனான தூமகேது மிகப்பெரிய ஆசிரியர். பல கலைகளை கற்றவர். இவரிடம் பாடம் படிக்க வேண்டுமானால் மாணவர்கள் போட்டி போட்டு செல்வார்கள். தற்போது சிறந்த கல்லூரிகளை தேர்ந்தெடுத்து மாணவர்கள் படிக்க செல்வதுபோல, அனைத்தும் அறிந்தவர் என்பதால் தூமகேதுவை சுற்றி மாணவர் கூட்டம் மொய்த்துக் கொண்டே இருக்கும். அவர் என்ன சொன்னாலும் மாணவர்கள் அப்படியே கேட்பார்கள். இதன் காரணமாக படிப்பில் கவனம் அதிகமாகி கலைகளில் சிறந்து விளங்கினார்கள். மிகச்சிறப்பாக படிக்கும் மாணவர்களை தூமகேது சுற்றுலா அழைத்துச்செல்வார். சிவாலயங்களுக்கு செல்வது அவரது வழக்கம். அக்கோயிலின் அமைப்பு, தல வரலாறு, சிவ வழிபாட்டின் மகிமை ஆகியவற்றை செய்முறை விளக்கங்களுடன் கற்றுக்கொடுப்பது வாடிக்கையாக இருந்தது. அவ்வாறு அவர் வந்த தலங்களில் ஒன்றே ஆதிகம்பட்ட விஸ்வநாத கோயிலாகும். இவரது ஆசிரிய பணியை மெச்சி இறைவனே அவருக்கு காட்சி கொடுத்தார். ஆனந்தமயமான அந்த காட்சியைக்கண்ட தூமகேது இறைவனுக்கு விசுவேசர் என்றும், அம்பாளுக்கு ஆனந்தநிதி என்றும் பெயர்சூட்டினார். அவ்விடத்தில் இருந்த தீர்த்தத்திற்கு தூமகேது தீர்த்தம் என்று இறைவன் பெயர்சூட்டினார்.

நகை வியாபாரிகள், ஆசிரியர், மாணவர்கள் பிரார்த்தனை தலம்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).