📜 About this temple
மிதிலா நகரில் ஜனக மகாராஜன் மிகப்பெரிய வேள்வி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தான். அந்த வேள்விச் சாலைக்குள் செல்வதற்காக சிறுவன் ஒருவன் காத்திருந்தான். அவன் உடலில் அத்தனை கோணல். முதுகில் கூன். ஒரு கை பின்புறமும் முதுகை முன்புறமும் திரும்பி மடங்கியவாறு கோணல். கால்களில் ஒன்று மழிந்து மடங்கி, சரிவர நடக்க முடியாத ஒரு பரிதாப நிலை. வேள்விச் சாலைக்குள் நுழைந்து, தலைமைப் பண்டிதர் வந்தியை சந்திக்க வேண்டும் என்று அந்த பாலகன் கேட்டான். காவலர்களோ அவனது தோற்றத்தைக் கண்டு தடுத்து நிறுத்தினர். அவர்களுக்கிடையே பெருத்த வாக்குவாதம் ஏற்பட்டது. வேள்விச்சாலை முன்னால் ஏற்பட்ட குழப்பத்தைக் கண்ணுற்ற ஜனகமகாராஜன், தன் இருக்கையை விட்டு அகன்று, வேள்விச் சாலையின் வாசலுக்கு வந்தான். விவரம் தெரிந்து கொண்டான். எனது தலைமைப் பண்டிதன் வந்தி அத்தனை சாத்திரங்களையும் கற்றறிந்த அறிஞர். பல நூற்றுக்கணக்கான முனிவர்களும், வேத விற்பன்னர்களும் அவரிடம் வாதத்தில் தோற்று விட்டனர். தன்னிடம் தோற்றவர்களை வந்திப் பண்டிதர் கங்கையில் மூழ்கும்படி செய்துள்ளார். இதையெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா ? அப்படியிருந்தும், இப்படி ஒரு துணிச்சல் ஏன் ? என்று கோணல் சிறுவனைக் கேட்டார் ஜனகமகாராஜன். அதற்கும் பதிலளித்தான் அந்தச் சிறுவன், உம்முடைய தலைமைப் பண்டிதர், என் போன்ற வேதாந்தப் பயிற்சி பெற்றவர்களை இதுவரை சந்திக்கவில்லை. தன்னிடம் தோற்றவர்களை கங்கையில் மூழ்கடித்து விட்டதாக தற்பெருமை கொண்டுள்ளார். அறிஞனுக்கும் அகம்பாவம் சத்ரு ! எனது தந்தையாரையும் அவர் மூழ்கடித்துள்ளார். அந்த சோக வரலாற்றை என் அன்னை எனக்குக் கூறியுள்ளாள். அந்தக் கடனைத் தீர்க்க வந்திருக்கிறேன் நான். வேத சாஸ்திரங்களை பிறருக்கு உபதேசித்து வந்த பெரியோர்களில் ஒருவர், உத்தாலகர். அவரிடம் கஹோனகர் என்ற ஒரு சீடனும் இருந்தான். பக்தியும், ஒழுக்கமும் மிகுந்திருந்தாலும், கல்வி கற்கும் திறமை அவனிடம் பளிச்சிடவில்லை. எனவே, பிற சீடர்கள் அவனை எள்ளி நகையாடுவர். கல்வியில் மேன்மையுறாவிடினும், அவனது நியமம், பக்தி, குணம் ஆகியவற்றைக் கருதி, தனது மகள் சுஜாதாவையே அவனுக்கு மணமுடித்தார் உத்தாலகர். அவர்கள் இருவருக்கும் புத்திரனாகப் பிறந்தவன்தான் அந்தக் கோணல் சிறுவன். கருவிலிருந்தபோதே உத்தாலகர் மாணவர்களுக்கு அளித்த உபதேசங்களை உருப் போட்டு வந்தது அந்தச் சிசு. கஹோனகர், முற்றிலுமாக சாத்திர அறிவு பெறாததால
உடல் ஊனமுற்றோர், இளம்பிள்ளை வாதநோயால் பாதிக்கப்பட்டோர் இங்கு வழிபாடு செய்து பலனடைவது சிறப்பு.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).