🛕 Arulmigu Kasi Vishwanathar And Rajagopalaswamy Temple

Arulmigu Kasi Vishwanathar and Rajagopalaswamy Temple, Umayalpuram - 614203

📜 About this temple

படைப்புக்கடவுளான பிரம்மா கயிலாயம் சென்றபோது, அங்கிருந்த முருகனைக் கவனிக்காமல் சென்றார். முருகன் அவரை அழைத்து யார் என விசாரித்தபோது, "நானே படைப்புக்கடவுள்' என கர்வத்துடன் கூறினார். அவரது ஆணவத்தை அடக்க எண்ணிய முருகன், படைப்பிற்கு ஆதாரமான பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்க, அவர் தெரியாமல் விழித்தார். அவரிடமிருந்து படைக்கும் தொழிலைப் பறித்தார். சிவபெருமானுக்கும் இதற்குரிய விளக்கம் தெரியவில்லை. எனவே, முருகன் தந்தைக்கே குருவாக இருந்து, அம்மந்திரப் பொருளை உபதேசித்தார். இந்த நிகழ்வு ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் நிகழ்ந்தது. உபதேசம் பெற சிவன் வந்த போது அம்பிகையும் உடன் வந்தாள். சிவன் அவளை இத்தலத்தில் இருக்கும்படி சொல்லிவிட்டு, தான் மட்டும் சென்று உபதேசம் கேட்டார். உமையவளாகிய அம்பாள் தங்கிய தலமென்பதால் இவ்வூர், "உமையாள்புரம்' எனப்பெயர் பெற்றது. மற்றொரு வரலாறும் இத்தலத்துக்கு உண்டு. விஜயா என்ற கந்தர்வப்பெண், சிவன் மீது தீவிர பக்தி கொண்டிருந்தாள். அவள், இங்கு தீர்த்தம் உண்டாக்கி சிவதரிசனம் வேண்டி தவமிருந்தாள். சிவன், அம்பாளுடன் காட்சி தந்து, அவளது வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார். மகிழ்ந்த விஜயா இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பினாள். சுவாமிக்கு காசிவிஸ்வநாதர் என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்த வரலாறு பிரம்மாண்ட புராணத்தில் உமாபுர மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.

அம்பாள் சன்னதி முன்பு, கர்ப்பிணிப்பெண்களுக்கு வளைகாப்பு வைபவம் நடத்துகின்றனர்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).