🛕 Arulmigu Bootha Narayanaswamy Temple

அருள்மிகு பூத நாராயணசுவாமி திருக்கோயில், சுருளி - 625533
🔱 Bootha Narayanaswamy

📜 About this temple

ஒரு முறை சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்த ராவணேஸ்வரன் ஈரேழு உலகம், அண்டசராசரங்கள், நவக்கிரகங்கள், 12 ராசிகள், 27நட்சத்திரங்கள், தேவர்கள் ஆகியோர் தனக்கு கீழே கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தான் பெற்ற வரத்தின் பலனால் அவன், தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தான். ராவணனின் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட எண்ணி பாதிக்கப்பட்ட அனைவரும் யாவரது கண்களுக்கும் புலப்படாமல் ககனமார்க்கமாக சென்று, மகாவிஷ்ணு தலைமையில்ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, தேவர்களைக் காணாத ராவணன் சனி பகவானை அனுப்பி அவர்களை கண்டறிந்து வரும்படி பணித்தான். அது முடியாமல் போனதால் நாரதரிடம், தேவர்களின் மறைவிடத்தை கண்டறியும்படி அவருக்கு ஆணையிட்டான். அப்படி தேடி வரும் போது ஒரு புற்றின் நடுவே மகரிஷி தவம் செய்து கொண்டிருந்ததைக் கண்டார். நாரதர் அவரிடம் தேவர்கள் இருப்பிடம் பற்றி கேட்க, அவர் தேவர்கள் ஆலோசனை நடத்தும் இடத்தைக் கூறினார். நாரதர் மூலமாக இச்செய்தியை அறிந்து கொண்ட ராவணேஸ்வரன், கடுங்கோபம் கொண்டு தேவர்களை அழிக்க தனது அரக்கர் படையுடன் புறப்பட்டான். அவனிடமிருந்து தேவர்களைக் காக்கும் பொருட்டு மகாவிஷ்ணு, மகரிஷி தவம் செய்த இடத்தில், பஞ்சபூதங்களின் மொத்த வடிவில், பூதசொரூபத்துடன் விண்ணுக்கும் மண்ணுக்குமாக எழுந்து நின்றார். அவரது பூதகோலத்தைக் கண்டு பயந்த ராவணன் தன் அரக்கர் படையுடன் திரும்பி ஓடினான். அப்போது ரகசிய ஆலோசனையை முடித்துவிட்டு, அவ்விடத்திற்கு வந்த தேவர்கள் பூத நாராயணனாக உக்கிரத்துடன் இருந்த மகாவிஷ்ணுவிற்கு அன்னம் படைக்க, அதனை உண்ட அவர் தனது விஸ்வரூபத்தை அடக்கி ஒளிமயமாக காட்சியளித்தார். இவ்வாறு தேவர்களுக்கு பூதநாராயணனாக காட்சி தந்த மகாவிஷ்ணு இத்தலத்தில் வீற்றுள்ளார்.

இங்கு பெருமாள் சுருளியாண்டவ லிங்கமாக அருள்பாலிக்கிறார். இம்மலையில் முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், தேவர்கள் தவம் புரிந்துள்ளனர். இத்தலத்தில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் பூதநாராயணனாக பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).