🛕 Arulmigu Paramasivan Temple

அருள்மிகு பரமேஸ்வரி திருக்கோயில், Silvarpatti - 625602

📜 About this temple

ஒரு முறை இப்பகுதியில் வசித்த சிவபக்தர் தனக்கு குழந்தை வரம் வேண்டி, காசி, ராமேஸ்வரம் சென்று இறைவனை வழிபட்டார். இறைவனின் அருளால் அவருக்கு பிறந்த குழந்தை நோய்வாய்ப்பட்டு திடீரென இறந்து போனது. இதனால் இறைவனின் மீது அவருக்கு ஏற்பட்ட வெறுப்பால், பூஜைப்பொருள்களை ஆற்றில் போட முடிவு செய்து விட்டு படுக்கச் சென்றார். அன்று இரவில் அவர் கண்ட கனவில் ஊருக்கு மேற்கே உள்ள மலையில் இருந்த துறவியுடன் இறந்துபோன தனது மகன் இருந்ததைக் கண்டார். உடன், அவர் தனது மகனை அழைக்க அவன் தந்தையிடம் வராமல் துறவியிடமே சென்று படுத்துக்கொண்டான். தனது மகனை தன்னிடம் அனுப்பி வைக்கும்படி துறவியிடம் தந்தை கேட்க, அவன் தனக்கு சேவை செய்ய வந்தவன் என்றும், அவனைப் போன்று இன்னொரு மகன் அவருக்கு பிறப்பான் என்றும் கூறினார். அப்போது , "என் மகனை சேவைக்காக எடுத்துக் கொண்ட தாங்கள் யார்? என துறவியிடம் அவர் கேட்டார். அச்சமயத்தில் மேற்கே உள்ள கூவலிங்கன் மலையில் நட்சத்திர வடிவில் ஜோதி தோன்ற, துறவி வடிவில் இருந்த பரமசிவன் பார்வதி சமேதராக காட்சி தந்தார். நடந்ததைப்பற்றி அவர் மறுநாள் காலையில் ஊர் மக்களிடம் கூற, மக்கள் அனைவரும் சிவன் காட்சி தந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு இரண்டு ஜோடி பாதசுவடுகளும் அதைச்சுற்றி மலர்களும் இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். அதன்பின், அங்கு கோயிலை எழுப்பி தொடர்ந்து வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலம் சைவ-வைணவ ஒற்றுமை தலமாக விளங்குகிறது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).