🛕 Arulmigu Suyambu Saniswara Bhagavan Temple

அருள்மிகு சுயம்பு சனீஸ்வரபகவான் திருக்கோயில், குச்சனூர் - 625552
🔱 Sani (Shani Bhagavan)

📜 About this temple

தினகரன் என்ற மன்னன் குழந்தை வரம் வேண்டி இறைவனிடம் வேண்டினான். அப்போது அசரீரி ஒன்று உன் வீட்டுக்கு ஒரு பிராமணச் சிறுவன் வருவான். அவன் வந்த பிறகு உனக்கு குழந்தை பிறக்கும் என்றது. அதுபடியே வந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயரிட்டு வளர்த்தான். அரசிக்கும் குழந்தை பிறந்து சதாகன் என்ற பெயருடன் வளர்ந்தான். புத்திசாலியான வளர்ப்பு மகன் சந்திரவதனுக்கே முடி சூட்டப்பட்டது. இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்கு சென்று இரும்பால் சனியின் உருவத்தை படைத்து வழிபட்டான். வளர்ப்பு மகனான எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு துன்பம் தராதே அத்துன்பத்தை எனக்கு கொடு என்று வேண்டினான். சனீஸ்வர பகவான் வனது நியாயத்தை உணர்ந்து ஏழரைநாளிகை மட்டும் அவனை பிடித்துக் கொள்வதாக கூறி பல கஷ்டங்களை கொடுத்தார். பின்பு அவன் முன் தோன்றி உன்னைப்போன்ற நியாயஸ்தர்களை பிடிக்க மாட்டேன் என்றும் இப்போது உன்னை பிடித்தற்கு காரணம் உன் முன் ஜென்ம வினை என்று கூறி மறைந்தார். பிறகு சந்திரவதனன் இவ்வூரில் குச்சுப்புல்லால் கூறை வேய்ந்து கோயில் எழுப்பினான் என வரலாறு கூறகிறது. இதுவே குச்சனூர் என பெயர் வழங்க காரணமாயிற்று. அதன் பிறகு, சனி தோஷம் பிடித்துத் துன்பப்படும் பலர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுத் துன்பம் நீங்கிச் செல்கின்றனர். புராண வரலாறு: வர்க்கலா தேவியும் சாயா தேவியும் சூரியனின் மனைவியான சுவர்க்கலா தேவிக்கென்று சிவசக்தி இருந்தது. தான் இல்லாத நேரத்தில் சூரியனுக்கு ஏற்படும் மோகத்தை தணிக்க தன் நிழலையே தன்னைப் போன்ற ஒரு பெண்ணாக மாற்றி சாயாதேவி என்று பெயர் சூட்டினார். பின்னர் சுவர்க்கலா தேவி சாயா தேவியை நோக்கி நான் சூரிய பகவானுடன் இல்லறம் நடத்தும் சக்தியை இழந்து விட்டேன். மீண்டும் அச்சக்தியைப் பெற கானகம் வந்துள்ளேன். எனவே, சூரியனுக்கு என்னைப் போலவே மனைவியாக இருந்து என் குழந்தைகளையும் கண்போல் வளர்த்து வரவேண்டும் என்று ஆணையிட்டாள். அவள் வேண்டுகோளை ஏற்று சூரியனுக்கு மனைவியாகப் புறப்படும் முன் தங்கள் சொற்படியே நடக்கின்றேன்', ஆனால் சூரிய பகவானுக்கு உண்மை தெரிய வேண்டிய நிலை ஏற்பட்டால் நான் உண்மையை உரைப்பதை'த்தவிர வேறு வழியில்லை என்றாள். அதற்கு சுவர்க்கதேவி உடன்பட்டாள். சுவர்க்கதேவி தன்னை யார் என்று அறியா வண்ணம் குதிரை வடிவு கொண்டு தவம் செய்யத் தொடங்கினாள், அங்கே சாயாதேவி சுவர்க்க

கோயில்கள் அனைத்திலும் சனிபகவான் நவக்கிரகமாக வீற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் திருநள்ளாறுக்கு அடுத்து சுயம்புவாக வீற்றிருப்பது தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரன் கோயில் தான். அரூபி வடிவ லிங்கம் பூமியிலிருந்து வளர்ந்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த மஞ்சன காப்பு பூசப்பட்ட நிலையிலேயே சுயம்பு உள்ளது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).