🛕 Arulmigu Veerapa Ayyanaar Temple

அருள்மிகு வீரப்ப அய்யனார் திருக்கோயில், பூதிபுரம் - 625531
🔱 Veerapa Ayyanaar

📜 About this temple

300 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. அல்லிநகரம்- பூதிப்புரம் கிராமவாசிகள் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம். நன்றாக மேய்ந்தாலும் வீட்டிற்கு வந்தால் பல மாடுகள் பால் கறப்பதே இல்லை. இதனால் மேயும் இடங்களுக்குச் சென்று பாலை கறந்து கொண்டு வந்தனர். அப்போது ஒருநாள் கோயில் அமைவிடப் பகுதியில் (சுவாமி வெளிப்படாத காலம் அது) வந்ததும் தவறி விழுந்தனர். கையில் இருந்த பாத்திரங்கள் உருண்டோடின. கீழே சிந்திய பால் உடனே காணாமல் போயின. அப்போது யாரோ அதனை குடிக்கும் சத்தம் கேட்டது. இதனைக் கேட்டு பொதுமக்கள் மிரண்டு ஓடினர். பலமுறை இது போன்று நிகழ்ந்ததால் இச்செயல் கிராமம் முழுவதும் பரவியது. அனைவருக்கும் வியப்பும், திகைப்பும் ஏற்பட்டது. உண்மை நிலையை அறியும் பொருட்டு சித்திரை முதல் நாளில் சம்பந்தப்பட்ட பகுதியில் ஏராளமானோர் கூடினர். அப்போது அவர்களுள் ஒருவருக்குள் சுவாமி உட்புகுந்து அருள்வாக்கு கூறத் துவங்கினார். அதில், உங்களை காப்பாற்றும் பொருட்டே நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன். என் பெயர் வீரப்பையா. நான் தற்சமயம் பூமிக்குள் மறைந்திருக்கிறேன். என்னை மேலே கொண்டு வாருங்கள் என்று கூறியதாக ஒரு செவிவழிச் செய்தி உண்டு. இப்பகுதியில் சென்ற விவசாயி ஒருவரின் கோடாரி கைநழுவி மாமரத்தின் வேரில் விழுந்தது. வேரில் இருந்து ரத்தம் பீறிட்டது. அந்த சமயத்தில் ஒரு அசரீரி, என் பெயர் வீரப்பையா. நான் பூமிக்குள் இருக்கிறேன். என்னை வெளியே கொண்டு வாருங்கள் என்றதாகவும் செவி வழிச் செய்தி உண்டு. இவ்வாறு சுயம்புத் தோற்றம் சித்திரை முதல் தேதியில் வெளிப்பட்டது. சுவாமியின் இஷ்ட வாகனம் குதிரை. குதிரையிலே அய்யனார் இரவுக் காவலில் ஈடுபடுவார். சுற்றுப்புற வனப்பகுதி தோட்டங்கள், விளைச்சல் பகுதிகள், குடியிருப்புகளில் வலம் வருவதாக இப்பகுதி மக்களிடையே நம்பிக்கை உண்டு. இதற்கு ஆதாரமாக இரவு நேரங்களில் குதிரையின் குளம்பொலி சப்தத்தை பலரும் கேட்டதாக கூறுகின்றனர். கோயில் கருவறையில் லிங்க வடிவிலான சுயம்புத் தோற்றமே இருப்பதால் பக்தர்கள் அய்யனாரை குதிரையில் ஏற்றி பார்க்க ஆசைப்பட்டனர். இதற்காக கோயிலின் நுழைவுப் பகுதியில் பிரம்மாண்டமான குதிரையில் முறுக்கு மீசையுடன் வாள் ஏந்திய அய்யனார் சிலை அமைக்கப்பட்டது. காவல் தெய்வத்தின் கண்ணில் தெரியும் கனலின் தகிப்பில் இப்பகுதியில் இதுவரை பிரச்ன

இங்குள்ள வீரப்ப அய்யனார் சுயம்புவாக தோன்றியவர். அதுமட்டுமின்றி கருவறை விக்ரகங்கள் உலோகத்தால் செய்யாமல் கருங்கற்களிலே செய்கிறார்கள். இதற்குக் காரணம் கற்கள் செம்பின் ஆற்றலை விட பல மடங்கு அதிகமானது. கல் எந்தப் பொருளையும் தன்பால் இழுத்துக் கொள்ளும் சக்தியுடையது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).