📜 About this temple
காசியம்பதியில், ஓர் அதிகாலைப் பொழுது ! கங்கையில் முங்கி எழுந்தவரின் கைகளில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. என்ன என்று அதிர்ச்சியும் குழப்பமுமாக கைகளால் துழாவி, அதனை அப்படியே வெளியில் எடுத்தவர், ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் திளைத்து நின்றார். அது, பாணலிங்கம். உள்ளங்கை அளவே இருந்த அந்த லிங்கத்தைக் கண்ணில் ஒற்றிக்கொண்டார்; சிரசில் வைத்துக் கொண்டார்; நெஞ்சில் வைத்துக் கொண்டாடினார்; இரண்டு உள்ளங்கைகளுக்கு நடுவில் வைத்து, சிட்டுக்குருவியை ஏந்துவது போல் ஏந்திக் கூத்தாடினார். அவர் பெயர் கோவிந்தன். உள்ளங்கை அளவிலான சிவலிங்கத் திருமேனியைக் கண்டெடுத்ததால், உள்ளங்கை லிங்கம் கொணர்ந்த நாயனார். எனப் போற்றப்பட்டார் அவர் ! உடையவர் எனப் போற்றப்படும் ராமானுஜருக்குச் சகோதர உறவு, இந்தக் கோவிந்தன். இவர், திடீரென சைவத்துக்கு மாறினார். காசிக்குச் சென்று, கங்கையில் நீராடி, விஸ்வநாதரைத் தரிசித்து, பாண லிங்கமும் கையில் கிடைக்க... அகம் மகிழ்ந்தார்; பூரித்தார். அவர் அந்தப் பாணலிங்கத்தை காளஹஸ்தி கோயிலில் வைத்து, பூஜித்ததாகச் சொல்வர். காலங்கள் ஓடின. கோவிந்தன் திரும்பவும் தன்னை வைஷ்ணவ சம்பிரதாயத்தில் இணைத்துக் கொண்டார். ராமானுஜர், கோவிந்தனைத் தனது சிஷ்யர்களுள் ஒருவராக ஆக்கிக் கொண்டார். எம்பார் எனும் திருநாமத்தையும் சூட்டி, அவருக்கு உபதேசித்து அருளினார். அன்று முதல், எம்பார் சுவாமிகள் என அவர் போற்றப்பட்டார். எம்பார் என்கிற கோவிந்தனுக்காக, ராமானுஜரின் உத்தரவுப்படி, சந்திரகிரி அரசர் கட்டித்தேவன் யாதவராயன் என்பவன், இந்த அழகிய சிவாலயம் ஒன்றை எழுப்பினான் என்கிறது ஸ்தல வரலாறு.
மூலவரின் அருகிலேயே காசியில் கிடைத்த உள்ளங்கை அளவிலான பாணலிங்கம் இருப்பது சிறப்பு.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).