📜 About this temple
திருமங்கை ஆழ்வார் பல திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து கொண்டு வரும் போது இத்தலம் வழியாக சென்றார். ஆனால், இத்தலத்தை பாடவில்லை. இதைக்கண்ட தாயார் பெருமாளிடம், உடனே சென்று ஒரு பாசுரம் பெற்று வருமாறு சொன்னார். அதற்குள் ஆழ்வார் மாமல்லபுரம் அருகே உள்ள திருக்கடன் மல்லை கோயிலுக்கு போய் விட்டார். அங்கு சென்ற பெருமாள் ஆழ்வாரிடம் பாசுரம் ஒன்றைக் கேட்டார். "நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை நின்றவூர் நித்திலத் தொத்தூர் சோலை காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக் கண்டது நான் கடல் மலலை தலசயனத்தே' என்று பாடினார் ஆழ்வார். இதன் பொருள்: "எம்பெருமான் என் பாடல் கேட்டு வந்து நின்றதை நான் கண்டது கடன் மல்லையாகிய மாமல்லபுர திருத்தலத்தில்' என்பது தான். இப்படி, இந்த உலகையே காக்கும் பெருமாளே, பக்தனின் பெருமையை உலகுக்கு உணர்த்த இவ்வாறு பாடல் வாங்கிச்சென்றார். பாடல் பெற்று வந்த பெருமாளைப்பார்த்த தாயார்,""என்ன இது! எல்லா தலங்களுக்கும் பத்து பாடல்களுக்கு மேலிருக்க இத்தலத்திற்கு மட்டும் ஒரு பாட்டு மட்டும் தானா?'' என கேட்கிறார். இதைக்கேட்ட பெருமாள் மீண்டும் ஆழ்வாரிடம் பாடல் பெற சென்றார். அதற்குள் ஆழ்வார் திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணமங்கை வந்துவிட்டார். அங்கே கண்ணமங்கை பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது திருநின்றவூர் பெருமாள் வந்து நிற்பதை தன் ஓரக்கண்ணால் கண்ட திருமங்கை ஆழ்வார் அவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்தார்.
குபேரன் தன் நிதியை இழந்து வாடியபோது என்னைப்பெற்ற தாயாரை வழிபட்டு மீண்டும் பெற்றான் என்கிறது புராணம். இங்கு தாயார் சகலசவுபாக்கியங்களையும் தரும் வைபவலட்சுமியாக உள்ளார். ஆதிசேஷனுக்கென சன்னதி உள்ளது தனி சிறப்பு. இந்த சன்னதியை புதன் கிழமைகளில் அர்ச்சனை செய்து நெய்விளக்கிட்டு பால் பாயாசம் படைத்தால் ராகு-கேது மற்றும் சர்ப்ப தோஷம் விலகும் என்பதும் மாங்கல்ய பலன் உண்டாகும் என்பதும் நம்பிக்கை.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 59 வது திவ்ய தேசம்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).