🛕 Angalaparameswari temple

📜 About this temple

திருக்கயிலை நந்தவனத்தை காவல்புரிந்து வந்த காத்தவராயனின் சேட்டை தாங்க முடியாமல் சப்தகன்னிகள் சிவபெருமானிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட அவர், காத்தவராயனை தண்டிக்கப் புறப்பட்டார். அன்னை பராசக்தியின் பிள்ளைகளில் ஒருவனே காத்தவராயன். பிள்ளைப் பாசத்தால் உந்தப்பட்ட பராசக்தி, காத்தவராயனுக்கு வேகாச் சுடலையில் சாகா வரம் தந்தாள். காத்தவராயனின் உடல் தீயினால் வேகாது என்பது இதன் பொருள். வரம்பெற்ற காத்தவராயன், கொல்லிமலையில் குழந்தையாய் பிறந்தான். அங்கும் சேட்டையை தொடர்ந்தான். கடும் கோபமடைந்த சிவன் மீண்டும் அவனைத் தண்டிக்க கிளம்பினார். பராசக்தியோ அவரைத் தடுத்தார். தன்னைத் தடுத்த பராசக்தியை, தன் இடப்பாகத்தை விட்டு நீங்கும்படிச் சபித்தார். சாபம் பெற்ற பராசக்தி, விமோசனத்திற்காக பூலோகம் வந்து தவம் செய்யக் கிளம்பினாள். சிவபெருமான் அவளிடம் இருநாழி நெல்லைக் கொடுத்து, கல்லிலும் நெல் விளையும் கொல்லிமலைக்குச் சென்று அங்குள்ளோரைப் பருவம் அறிந்து பயிர்செய்யக் கூறினார். சிவகணங்களுடன் அன்னை பராசக்தி, அன்னை காமாட்சியாகக் கொல்லிமலைச்சாரலான புளியஞ் சோலைக்கு வந்து தவம் செய்தாள். தன் தங்கை தவம் செய்ய புறப்பட்டாள் என்பதைக் கேட்ட மகாவிஷ்ணுவும் மாடு மேய்க்கும் இடையனாக முத்துக்கருப்பண்ண சுவாமியாக அவதாரம் எடுத்து, மாடு கன்றுகளுடன் கொல்லிமலைச் சாரல் வந்து சேர்ந்தார். அன்னையின் தவத்திற்கும் பூஜைக்கும் காத்தவராயன் உதவினான். ஒருசமயம், பூஜைக்கு தேவையான பால் வேண்டி, மேய்ச்சல் நிலத்திலிருந்த இடையர்களிடம் ஐந்து கலம் பால் கேட்டான். தங்கள் தலைவரின் ஆணை இல்லாமல் தரஇயலாது என்றனர். கோபம் கொண்ட காத்தவராயன் கிண்ணாரம் என்ற வாத்தியத்தை இசைத்து, அதன் ஒலியால் மாடு கன்றுகளை மயக்கி, உடன் அழைத்துச் சென்றுவிட்டான். தன் மகன் மாடு கன்றுகளுடன் வருவதை கண்ட காமாட்சி காரணம் கேட்டாள். நடந்ததை கூறினான் காத்தவராயன். தன் அண்ணனே இடையர்தலைவனாக இங்குவந்துள்ளார் என்பதை காமாட்சி அறிந்தாள். தன் மகனைக் கண்டித்து, மன்னிப்பு கேட்கும்படி கூறினாள். இடையர்கள் தலைவரிடம் சென்று நடந்ததைகூறினர். வந்தவன் கள்ளன் அல்ல, என் தங்கையின் மகன், என்று தலைவர் விளக்கம் அளித்தார். தானே பால்கொண்டு போய், கொடுத்துவிட்டு தங்கையையும், மருமகனையும் பார்த்துவிட்டு வருவதாக புறப்பட்டார். கண்ணீர்விட்ட காமாட்சியிடம், உன்னோடு நான் இருக்கிறேன் கவலைப்படாதே, தவம் செய்து வா, உன் கணவனை

சயனநிலையில் பெரியநாயகி என்ற பெயரில் அம்பிகை எட்டே முக்கால் அடியில் அருள்பாலிக்கிறாள். புல்லாங்குழலுடன் கூடிய கருப்பசாமி அருள்பாலிப்பதும் சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).