📜 About this temple
ராஜராஜ சோழ மாமன்னன், ஆழ்ந்த சிவபக்தி கொண்டவன். இதனால் அவனுக்கு சிவபாதசேகரன் எனும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர் சோழ தேசத்து மக்கள். அவனது வலதுகரமாகவும், சோழதேசம் செழித்து வளரக் காரணமாகவும் இருந்தவர் பிரம்மராயர். இவர் திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டவர். எனவே, வைஷ்ணவர் வணங்கும் வகையில், திருமாலின் திருத்தலங்களுக்குப் பல திருப்பணிகள் செய்துள்ளான் ராஜராஜ சோழன். இதேபோல், பிரம்மராயரும் சைவக் கோயில்களுக்கு ஏராளமான உதவிகள் செய்துள்ளார். இதன் அடுத்தடுத்த காலகட்டங்களில், வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன. கூடவே சைவ, வைணவ நியதிகளுக்கு அப்பாற்பட்ட தெய்வங்களையும் வணங்கத் துவங்கினர். மக்கள் அப்படி, சோழ தேசத்து மக்கள் வணங்கிய தெய்வம் தான் மாசாத்தனார். சங்க காலத்தில் சாத்தனார் வழிபாடு அதிக அளவில் இருந்தது. சாத்தனாரை வணங்கி விட்டுத்தான், மன்னர் சபையைக் கூட்டி ஆலோசிப்பார். போர் தொடுக்கப் பயணிப்பதற்கு முன், சாத்தனாருக்குப் படையல் போட்டுவிட்டுத்தான், படையோடு கிளம்பிச் செல்வார் அரசர். மாசாத்தனாரின் பேரருளை வியந்த மன்னர்கள் கருவூர் சேரமான் சாத்தான், பாண்டியன் கீரஞ்சாத்தான், சோழநாட்டுப் பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தான், ஒல்லையூர் கிழார் மகன் பெருஞ்சாத்தான் என, தங்களது பெயரில் சாத்தனாரின் திருநாமத்தையும் சேர்த்துக்கொண்டனர் என்று தெரிவிக்கிற கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் நிறையவே உண்டு. நாம் எல்லோரும் அறிந்த சீத்தலைச் சாத்தனார், உறையூர் முதுகன்னன் சாத்தனார், பெருந்தலைச் சாத்தனார் போன்ற பெருமக்கள் பலரும் மாசாத்தனாரை வணங்கி, வரம் பெற்றுப் பலம் பெற்றவர்கள்.இந்த சாத்தனாரே பின்னாளில் சாஸ்தா என அழைக்கப்பட்டார். இவரே தற்போது அய்யனார் என்ற திருநாமம் பெற்றார்.
கருவறையில் கழுத்து, மார்பு, விரல்கள், கணுக்கைகள், தோள்பட்டைகள் ஆகியவற்றில் ருத்திராட்சங்கள் துலங்க, வலது கையில் செண்டும், இடது கையில் சின்னதொரு சுவடியும் கொண்டு அழகுறக் காட்சி தருகிறார் மாசாத்தனார்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).