📜 About this temple
ஒரு காலத்தில், இந்தக் கோயில் இருந்த இடத்தில் மூங்கில் மரங்கள் வான் உயரம் வளர்ந்தோங்கி நின்றன. மூங்கில் காட்டின் நடுவே குறிப்பிட்ட இடத்தில் வேப்பமரங்கள் நின்றன. ஒருசமயம், மூங்கில் மரங்களை அப்பகுதியினர் வெட்டினர். நடுவில் நின்ற ஒரு வேப்பமரத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்படடது. அதை வேருடன் சாய்த்தனர். அதன் கீழே கல் ஒன்று புதைந்து கிடந்தது. கல்லைப் பெயர்த்தெடுக்க முயன்ற போது, கடப்பாறை முனை பட்டதும், கல்லுக்குள் இருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ந்துபோன தொழிலாளர்கள் அலறியடித்து ஓடி, ஊர் பெரியவர்களை அழைத்து வந்தனர். அப்போது அக் கூட்டத்திலிருந்த இறை நெறியாளர் ஒருவருக்கு அருள்வந்து, தான் மகமாயி என்றும், இந்த வேம்பினடியில் கிடந்த கல்லில் நீண்ட காலமாக குடிகொண்டு உள்ளதாகவும், தனக்கு ஊரார் ஒன்று கூடி கோயில் கட்டி வணங்கினல், இந்நகரைக் காத்து அருள்பாலிப்பதாகவும் சொன்னார். பக்தர்கள் அந்த புனிதக் கல்லை நீண்ட காலமாக கர்ப்பகிரகத்தில் வைத்து வழிபட்டு வந்தனர். காலப் போக்கில் அம்மனுக்கு சிலை வடிக்கப்பட்டது. இருப்பினும் கர்ப்பக்கிரகத்தில் புனிதக்கல் இன்றும் உள்ளது. அதற்கு முதல் பூஜை செய்த பின்னரே அம்மன் விக்ரகத்துக்கு தீபம் காட்டப்படுகிறது. வேப்பமரத்தடியில் புனிதக்கல் கிடைத்ததால், வேப்பிலை மாரியம்மன் என்ற பெயர் சூட்டப் பட்டது. வேப்பிலை மணக்க பாறையில் பிறந்தவள் என்பதால் ஊரின் பெயர் மணப்பாறை ஆகிவிட்டது. புனிதக்கல்லாக அருளும் மாரியம்மனை வணங்குதால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பதாலும் மணப்பாறை ஆகியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
சமயபுரம் மாரியம்மனின் தங்கையாக பாவிக்கப்படும் மணப்பாறை மாரியம்மன் காவிரியின் தெற்கு கரையிலும், சமயபுரம் வடகரையிலும் அமைந்திருப்பது சிறப்பு.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).