🛕 Arulmigu Nallandavar Temple

Arulmigu Nallandavar Temple, Kannanoor - 621206

📜 About this temple

மாயமானை ராமர், "பூண்டிய' (சாய்த்த) இடம் தான் மான்பூண்டி தலமாக விளங்குகிறது. இப்பெயர் மருவி மாமுண்டி ஆண்டவர் திருத்தலமாக விளங்குகிறது என தல வரலாறு சொன்னாலும், மான்பூண்டி வள்ளல் எனும் மாவீரர் ஒருவரின் வரலாறோடும் இத்திருக்கோயில் வரலாறு ஒப்பிடப்படுகிறது. மந்திர ஆற்றலும், வலிமை படைத்த வீரராகவும் விளங்கியவர் மாவீரர் மாமுண்டியரசர். இவர் கருணை உள்ளத்துடன் இப்பகுதியின் தலைவராக நீதி ஆட்சி செய்ததுடன், கள்வர் கூட்டத்திலிருந்தும் மிருகங்களிடமிருந்தும் இப்பகுதி மக்களை காத்து வந்தார். ஒரு முறை இத்தலம் அமைந்துள்ள இடத்திற்கு வடபகுதியில் உள்ள குளத்தில், பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிமார்களும் நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது கயவர் கூட்டத்தை சேர்ந்த பலர் இவர்களை துன்புறுத்தினர். இந்த கயவர்களிடமிருந்து தங்களை காப்பாற்றும்படி கதறினர். இவர்களின் கதறலைக்கேட்ட மாமுண்டியரசர் உடனே குதிரை மீது வந்து இவர்களை காப்பாற்றினார். ""சரியான நேரத்தில் வந்து எங்களது அண்ணன் போல் காப்பாற்றினீர்கள். எனவே உங்களை நல்லண்ணன் என அழைப்பார்கள்.'' என நன்றிப்பெருக்குடன் வணங்கினர். அன்றிலிருந்து நல்லண்ணன், நல்லாண்டவர், நல்லையா, மாமுண்டி என பல பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறார். துள்ளிக் குதித்து ஓடிய அந்த அழகிய, தங்க மாயமானைக் கண்டு மயங்கித்தான் போனாள் சீதை. அண்ணல் ராமனிடம் அதைப் பிடித்துத் தரக் கேட்க, மானைத் தூரத்திய ராமன், ஓர் இடத்தில் அதை அம்பிட்டு சாய்த்தான். மானை சாய்த்த இடமே மான்பூண்டித்தலம் ஆனதாம். பூண்டி என்ற சொல்லுக்கு சாய்த்த என்பது பொருள். மாமுண்டிச் சீமை என்று பழங்காலத்தில் மக்கள் இந்த இடத்தை அழைத்தனர். மாமுண்டி ஆறு ஓடி வரும் இங்கே, ஆற்றுக் கரையின் இரு மருங்கும் மணம் மிக்க மலர்களைத் தாங்கிய சோலை. மணப்பாறை என்று ஊரின் பெயரே இதனை ஒட்டி வந்தது தானாம். இப்பகுதியின் தலைவனாக விளங்கிய மாவீரன் மாமுண்டி, நீதிநெறியோடு ஆட்சி புரிந்ததோடு, ஆன்மிக வழியிலும் சிறந்து விளங்கினான். பில்லிப் பிணி அகற்றுவதில் சிறந்த சித்தனாகத் திகழ்ந்தான். இத்தகு சிறப்பு வாய்ந்த மாமுண்டிச் சித்தன் உறையும் திருத்தலமே இம்மாமுண்டி நல்லாண்டவர் திருக்கோயில், கோயில் சன்னிதி எழும்பும் முன்னரே, பொந்துப்புளி கருப்பண்ணசுவாமி இங்கே இருந்துள்ளார். இவர் மாமுண்டி ஆண்டவரின் இதயம் நிறைந்த இறைவன். மாதவம்பட்

இத்தலத்தில் சப்த கன்னிமார்கள், நல்லாண்டவரின் சகோதரிகளாக அறிவிக்கப்பட்டு மூலவருக்கு அருகில் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்கள். இங்கு இவர்களுக்குத்தான் முதல் பூஜை. லாட சன்னாசி என்பவர் வட தேசத்து சித்தர். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் கூடாது என்பதற்காக இவரை இத்தலத்திலேயே தங்கி அருளாசி வழங்கும்படி நல்லாண்டவர் வேண்டினார். அவரது விருப்பப்படி லாடம் பூட்டப்பட்ட நிலையில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் இவருக்கு இரண்டாவது பூஜை. மூன்றாவது பூஜையையே நல்லாண்டவர் ஏற்றுக்கொள்கிறார்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).