📜 About this temple
பெறும் சிறப்பு பெற்ற உறையூரை பராந்தக சோழன் ஆண்டு வந்தான். அவனது ராஜகுரு சாரமா முனிவர். இவர் மிகப்பெரிய சிவபக்தர். திருச்சி மலைக்கோட்டையில் ஒரு நந்தவனத்தை உருவாக்கி, தாயுமான சுவாமிக்கு பூஜை செய்து வந்தார். அந்த நந்தவனத்தில் சுவாமிக்காக ஏராளமான பூச்செடிகளை வளர்த்தார். ஆனால் மன்னன் பராந்தகசோழன் தனது மனைவி புவனமாதேவியின் கூந்தலில் சூட அந்த பூக்களை பறித்து சென்றான். தினமும் அவனது ஆட்கள் நந்தவனத்திற்கு வந்து பூக்களை சாரமா முனிவரின் அனுமதி பெறாமலேயே பறித்து சென்றனர். இதை அறிந்த முனிவர், மன்னனிடம் சென்று, "" மன்னா! நாடுகாக்கும் தாங்களே இப்படி மலர்களை பறித்து செல்வது முறையா?'' என முறையிட்டார். மன்னர், முனிவரின் பேச்சை மதிக்கவே இல்லை. "" என் ராணிக்கு போக மீதி பூக்கள் தான் உனது இறைவனுக்கு'' என ஆணவம் கொண்டு திட்டினான். இதனால் மனம் வருந்திய முனிவர், இறைவனிடம் முறையிட்டார். இறைவன் தாயுமானவன் கடும் கோபம் கொண்டார். கிழக்கு நோக்கி இருந்த அவர், மேற்கு முகமாக உறையூரை நோக்கி திரும்பி தனது நெற்றிக்கண்ணை திறந்தார். உடனே உறையூர் நகர் மீது நெருப்பு மழை பொழிந்தது. மக்கள் பயந்து ஊரைவிட்டே ஓடினர். மன்னனின் கோட்டை சிதைந்தது. மண்ணில் ஊரே புதைந்து விட்டது. வீடுகளை இழந்த மக்கள், இந்த நெருப்பு மழையில் பாதிக்காமல் நின்ற உறையூர் வெக்காளி அம்மனிடம் சென்று தங்கள் வீடுகளை தங்களுக்கு திருப்பி தரும்படி பிரார்த்தனை செய்தனர். வெக்காளி அம்மன் கருணை கொண்டு, தாயுமான சுவாமியின் சினத்தை தணிக்க முழு நிலவாக மாறி, அவர் முன்பு தோன்றினாள். அன்னையின் குளிர்ந்த பார்வை கண்டு இறைவன் அமைதி கொள்ள, நெருப்பு மழை நின்றது. இந்த நெருப்பு மழையில் அரசி புவனமாதேவியும் சிக்கிக் கொண்டாள். அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். நெருப்பின் உக்கிரம் தாளாமல், காவிரியாற்றில் சென்று குதித்தாள், காவிரி வெள்ளம் அவளை இழுத்துச் சென்றது. உத்தமச்சேரி என்ற இடத்தில் ஒரு அந்தணர் ராணியை காப்பாற்றி கரை சேர்த்தார். அவளை தனது இல்லத்தில் வைத்து பாதுகாத்தார். அங்கே அவளுக்கு ""கரிகால் பெருவளத்தான்'' என்னும் மகன் பிறந்தான். புவனமாதேவி வெக்காளி அம்மனின் பக்தை. அதன் காரணமாக அவள் அம்மன் கருணையால் உயிர் பிழைத்தால் மீண்டும் சோழகுலம் தழைத்தது. அன்று உறையூரை காத்த அன்னையை நன்றிப் பெருக்கோடு மக்கள் இன்று வரை வணங்கி வருகின்றனர்.
மேற்கூறை இல்லாத அம்மன் கோயில்களில், பொதுவாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை அசுரன் மீது பதியுமாறு அமர்ந்திருப்பாள். ஆனால் வெக்காளி அம்மன் வலதுகாலை மடித்து இடதுகால் பாதத்தை அசுரன்மீது பதியவைத்திருப்பது அபூர்வ காட்சியாகும்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).