📜 About this temple
ஜமதக்னி முனிவரும், அவரது பத்தினி ரேணுகாதேவியும் மகன் பரசுராமன் மற்றும் முனிவர்களும் வாழ்ந்து வந்தனர். வினாயகரின் அருளால் ஆயிரம் கைகள் பெற்ற கார்த்த வீரிய அர்ச்சுனன் எனும் மன்னன், ஜமதக்னி முனிவர் வாழ்ந்த காட்டுப் பகுதிக்கு வேட்டையாட வந்தான். உச்சிநேரத்தில் களைத்து உணவு கிடைக்காமல் திண்டாடிய மன்னன், ஜமதக்னி முனிவரை சந்தித்தான். மன்னனுக்கும் பல்லாயிரக்கணக்கான படைவீரர்களுக்கும் பல்சுவை உணவு அளித்தார், மாமுனிவர். எப்படி இது சாத்தியமானது என அரசன் கேட்க, அத்தனைக்கும் காரணம் காமதேனு என்னும் தெய்வீகப் பசுதான் என, அடுத்து வரப்போகும் ஆபத்தை உணராமல் உரைத்தார் மாமுனிவர். நாடாளும் மன்னன் மனதில் சிலநச்சு யோசனைகள் தோன்ற, காமதேனுவை என்னோடு அனுப்புங்கள் என கெஞ்சியும் பிறகு மிஞ்சியும் பேசினான். முனிவர் ஜமதக்னியோ, அது தெய்வீகப் பசு... ரிஷிகளிடம் மட்டுமே வாழும். அதை உன்னோடு அனுப்பவும் முடியாது, என்று மறுத்தார். அறிவிழந்த மன்னன் காமதேனுடைக் கைப்பற்ற தன் படைகளுக்குக் கட்டளையிட, மாமுனிவர் காமதேனுவுக்கு கண்ஜாடை காட்டினார். அவ்வளவுதான் தனது கொம்புகளை சுழட்டி சிலுப்பிய வேகத்தில் மன்னனின் படைகளுக்கு எதிராக மாபெரும் படையொன்று உருவெடுத்து மன்னனின் படைகளுக்கு மரணம் கொடுத்த பின் மறைந்து போயிற்று. ஆயிரங்கைகள் கொண்டு தடுத்தும் அவமானம் நிகழ்ந்துவிட்டதே என வருந்திய மன்னன் வஞ்சம் வைத்தான். கிளா மரங்கள் அடர்ந்த சோலைக்குள் ஜமத்னி முனிவர் சிவலிங்கத்தின் முன் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். எதிர்ப்பார்த்த சூழ்நிலை இயற்கையாய் கிடைக்க, வஞ்சம் வைத்த மன்னன் மாமுனியை சிரச்சேதம் செய்துவிட்டான். அப்போது அங்கு வந்த ரிஷிபத்தினியை இருபத்தொரு முறை வாளால் குத்திவிட்டு விரைந்தான். மகன் பரசுராமன் வரும்வரை தன் உயிரைத் தக்க வைக்குமாறு தெய்வத்தை வேண்டினார் ரிஷி பத்தினி, அதற்குள் பரிதவித்து வந்து சேர்ந்தான் பரசுராமன். நடந்ததையெல்லாம் மகனிடம் சொன்ன பின் உயிர் நீத்தார் ரேணுகாதேவி. ஈமச்சடங்குகள் முடிந்த பதினாறாம் நாள் காளியாக அவதாரம் எடுத்த ரேணுகா தேவி. மகன் முன்தோன்றி அவனுக்கு மழு (கோடரி) ஆயுதம் தந்து மறைந்தாள். இருபத்தோரு தலைமுறைக்கு சத்திரிய வம்சத்தை கருவறுக்க சபதம் செய்தான் பரசுராமன். அதை நிறைவேற்றியபின், தன் தந்தை வழிபட்ட சிவமூர்த்திக்கு ஓர் ஆலயம் அமைத்தான்.
இந்த சிவாலயத்தின் ஈசானிய மூலையில், ரேணுகாதேவி தனியாக வீற்றிருக்கும் சன்னதி அமைந்திருப்பது சிறப்பு.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).