📜 About this temple
இயற்கை வளம் கொழிக்கும் அந்த கிராமத்தில், கன்னிப் பெண்கள் ஏழுபேர் ஊருணியில் நீராடச் சென்றார்கள். விட்டு விட்டுப் பெய்த சாரலும், அதன் குளிர் கலந்து வீசிய தென்றலும், அவ்வப்போது மேகத்திரை விலக்கி எட்டிப் பார்க்கும் சூரியனின் இளம் மஞ்சள் வெயிலும் சங்கமித்திருந்த அந்தச் சூழல்.. சீக்கிரம் கரையேர விடாமல் அவர்களை தடுத்துவிட்டிருந்தது. ஏழு பெண்களும் நேரம் போவதே தெரியாமல் குளித்துக் கொண்டிருந்தார்கள்! அப்போது ஆடு-மாடு மேய்க்கும் இளைஞன் ஒருவன் அவ்வழியே வந்தான். பாண்டியதேசத்து இளைஞர்களுக் கென்றே சற்றே உரிமையும் நேசமும் கலந்த குறும்பு உண்டு. அந்த இளைஞனும் விளையாட்டாக ஒரு காரியம் செய்தான். குளித்துக் கொண்டிருந்த பெண்களின் ஆடைகள் மொத்தமும் கரையில் இருக்க, அதை மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டான். இதைப் பார்த்துவிட்ட பெண்கள் எழுவரும், ஆடைகளைக் கொடுத்துவிடும்படி எவ்வளவோ கெஞ்சியும் அவன் கேட்கவில்லை. போயேபோய் விட்டான்! பெண்கள் கலங்கினார்கள். அப்படியே எப்படிக் கரையேறுவது? எழுவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவர்களாக ஊருணிக்குள் மூழ்கினார்கள். அதன் பின் அவர்கள் எழுந்திருக்கவே இல்லை. ஆமாம்... ஊருணிக்குள் மூழ்கி, அதில் கலக்கும் நீரோடையின் வழியே, அருகில் இருக்கும் வனப்பகுதிக்குச் சென்றவர்கள், அங்கேயே தெய்வமாக எழுந்தருளினார்களாம். இங்கே ஊருக்குள் பெண்களைக் காணாமல் பெற்றோர்கள் தேட, ஊர் பூசாரிக்கு காட்சி தந்து வனப்பகுதியில் தெய்வமாய் தாங்கள் எழுந்தருளியிருக்கும் விஷயத்தைச் சொல்லி, எங்களை வழிபட்டால், இந்த ஊரை இன்னும் வளமாக்குவோம் என்று அருள்புரிந்தார்களாம். அந்தக் கிராமமும் எழுவரைமுக்கி எனப் பெயர் கொண்டது!
இங்கு சப்தகன்னியர் மூலவராக அருள்பாலிப்பது சிறப்பு.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).