🛕 Arulmigu Kasiviswanatha Swamy Temple

அருள்மிகு காசி விஸ்வநாத சாமி திருக்கோயில், Palayamkottai - 627002
🔱 Kasiviswanatha Swamy

📜 About this temple

கீழஆம்பூரைச் சேர்ந்த காசிவிஸ்வநாத பிள்ளை, விசாலாட்சி தம்பதியின் மகன் மதனராஜன். இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு ராஜாங்கம் மற்றும் பாண்டித்துரை உட்பட எட்டு ஆண்களும், இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர். நாளடைவில் ராஜாங்கமும், பாண்டிதுரையும் வசதி வாய்ப்பை இழந்து, திரிசூல மலையில் விறகு வெட்டி குடும்பம் கழித்தனர். ஒரு ஆவணி மாதத்தில் விறகு வெட்டச் சென்றவர்கள், அத்தியூத்து கரை அருகிலுள்ள ஆலமரத்தடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது இடி மின்னலுடன் மழை பெய்தது. வருத்தப்பட்ட சகோதரர்கள், நம்முன்னோர் காசி சென்று தானம், தர்மம் செய்தனர், ஆனால் நாம் மழையில் கஷ்டப்படுகிறோம், எங்களுக்கு ஒரு நல்ல வழி பிறக்காதா? என்று சிவபெருமானை வேண்டினர். அந்நேரத்தில் ஆலமரம் சாய்ந்து பூமி அதிர்ந்தது. ஆனால், அந்த இடத்தில், சலங்கை ஒலி ஒலிக்க, பூமியிலிருந்து மேல் நோக்கி ஒரு சிவலிங்கம் வந்தது. மின்னல் ஒளி லிங்கத்தின் மேல் விழுந்தது. லிங்கத்திலிருந்து சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி சகோதரர்களுக்கு காட்சி அளித்தனர். உங்கள் கஷ்டம் எல்லாம் தீர்ந்துவிடும், தைரியமாக இருங்கள், என்று கூறி மறைந்தனர். உடனே ஏழு செப்பு அண்டாக்கள் பூமியிலிருந்து மேலே வந்தன. அவற்றில் பொற்காசுகள் இருந்தன. பொற்காசுகளுடன் சிவலிங்கத்தையும் ஊருக்கு கொண்டு வந்து கோயில் கட்டி வழிபட்டனர். முன்னோர் நினைவாக காசி விஸ்வநாதர், விசாலாட்சி என்று சுவாமி அம்பாளுக்கு பெயர் சூட்டினர். அந்த ஊருக்கு சிநேகபுரி என பெயரிட்டனர். பிறகு அன்பு நகர் என்றாகி தற்போது ஆம்பூர் எனப்படுகிறது. ஆம்பு என்றால் காஞ்சோன்றி என்னும் செடி வகையைக் குறிக்கும். இந்த செடிகள் ஒரு காலத்தில் இங்கு அதிகம் இருந்ததால் ஆம்பூர் என பெயர் வந்திருக்கலாம்.

இக்கோயிலை சுற்றி பொதிகை மலை அடிவாரத்தில் பாபநாசநாதர் கோயில், திரிசூல மலையில் கோரக்கநாதர் கோயில், ராமநதி அணை அருகில் வில்வவனநாதர் கோயில், திருவாலீஸ்வரம், கடனா நதி, ராமநதி, தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் ஆகிய பஞ்ச மூர்த்தி ஸ்தலங்கள் உள்ளன.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).