🛕 Arulmigu Perathu Selvi Amman Kovil

அருள்மிகு பேராத்து செல்வி அம்மன் கோயில்
🔱 Devi

📜 About this temple

பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசித்த ஏழை பக்தர் ஒருவர், அம்பாளை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டார். அவருக்கு அம்பாளுக்கு கோயில் கட்டி வழிபட வேண்டுமென விருப்பம். ஆனால் கோயில் கட்டுமளவிற்கு அவரிடம் வசதி இல்லை. எனவே, அம்பாள் சிலையாவது பிரதிஷ்டை செய்ய வேண்டுமென நினைத்தார். ஒருநாள் இரவில் அவரது கனவில் அம்பாள் தோன்றினாள். தாமிரபரணி நதிக்கரையில் மூன்று அத்திமரங்கள் ஒன்றாக இருக்கும் இடத்தின் அருகில் ஆழமான பகுதி இருப்பதாக சுட்டிக்காட்டி, அவ்விடத்தில் தான் இருப்பதாக கூறினாள். மறுநாள் அவர், அந்த இடத்திற்கு சென்று வலையை வீசினார். அப்போது, அம்பாள் விக்கிரகம் அவருக்கு கிடைத்தது. நதிக்கரையிலேயே சிறு குடிசை அமைத்து, அம்பாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இவள் பெரிய ஆற்றில் கிடைக்கப்பெற்றவள் என்பதால், "பேராற்றுசெல்வி" என்ற பெயரும் பெற்றாள்.

ஆற்றில் கிடைத்த அம்பாள்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).