🛕 Arulmigu Thontarkal Nayinaar Temple

தொண்டர்கள் நயினார் திருக்கோயில், Thrirunelveli Town - 620076
🔱 Thontarkal Nayinaar

📜 About this temple

சிவத்தல யாத்திரை சென்ற திருஞானசம்பந்தர் குற்றாலம் சென்றுவிட்டு, திருநெல்வேலிக்கு வந்தார். நெல்லையப்பரை வணங்கி பதிகம் பாடினார். அப்போது அவருடன் வந்த அடியார்கள், இவ்விடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடவேண்டுமென விரும்பினர். தம் விருப்பத்தை சம்பந்தரிடம் தெரிவித்தனர். சம்பந்தருக்கு அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென ஆசை இருந்தது. ஆனாலும், லிங்கத்தை தனியே பிரதிஷ்டை செய்ய அவர் மனம் இடம் தரவில்லை. எனவே அகத்தியரை மானசீகமாக எண்ணி அடியார்களின் விருப்பத்தை நிறைவேற்றும்படி வேண்டினார். அவர் வில்வவனமாக இருந்த இப்பகுதியில் ஓரிடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக இருப்பதாக காட்டினார். சம்பந்தரும் இங்கு வந்தார். சுயம்புலிங்கம் இருந்ததைக் கண்டார். பின் சம்பந்தர், அடியார்களுடன் சேர்ந்து லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார். சிவன் அவர்களுக்கு காட்சி கொடுத்தருளினார். தொண்டர்களுக்காக எழுந்தருளியவர் என்பதால் சிவன், "தொண்டர்கள்நயினார்" என்ற பெயரும் பெற்றார்.

பிரகாரத்தில் அரசமரத்தின் கீழே வினை தீர்க்கும் விநாயகர், ஆவுடையார் மீது இருக்கிறார். இவருக்கு பின்புறத்தில் மற்றோர் விநாயகர் மேற்கு நோக்கி அருளுகிறார். ஒரே இடத்தில் முன்னும், பின்னும் திரும்பிய விநாயகர்களை காண்பது விசேஷமான தரிசனம். சிவன் சன்னதிக்கு முன்புறத்தில் திருஞானசம்பந்தர், அகத்தியர் இருவரும் இருக்கின்றனர். பிரகாரத்தில் தெற்கு நோக்கி, சனீஸ்வரர் தனியாக இருக்கிறார். இவர் வலக்கையில் கிளி வைத்த கோலத்தில் இருப்பது சிறப்பு. கோயில் வளாகத்தில் வன்னி மரத்தின் கீழ் விநாயகரும், எதிரே ஒரு கிணறும் அமைந்துள்ளது. மதுரை சுந்தரேஸ்வரர் தலத்தில், பெண் ஒருத்தியின் திருமணத்திற்கு வன்னி, லிங்கம், கிணறு இம்மூன்றும் சாட்சி சொல்லின. இதை நினைவுறுத்தும்விதமாக இத்தலத்தில் வன்னி விநாயகர் இருக்கிறார். இவருக்கு வலப்புறத்தில் சிவலிங்கம் இருக்கிறது. அருகில் இரண்டு நாகங்கள் எதிரெதிரே திரும்பியபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு. திருமண, நாக தோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி, இடது கையை நாகத்தின் மீது வைத்தபடி காட்சி தருகிறார். பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், முருகன் ஆகியோருக்கு சன்னதிகள் உண்டு.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).