🛕 Arulmigu Chandranlingam Temple

அருள்மிகு சந்திரலிங்கம் திருக்கோயில், திருவண்ணாமலை - 606604
🔱 Chandranlingam

📜 About this temple

மகாராஷ்டிராவிலுள்ள பண்டரிபுரம் கோயிலைப் போன்றே வந்தவாசி அருகே தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில் உள்ளது. இங்கு ரகுமாயீ சமேத பாண்டுரங்கனை தரிசிக்கலாம். ஞானானந்த சுவாமிகளின் சீடர் ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் அமைக்கப்பட்ட இக்கோயில், நாமாநந்த கிரி சுவாமிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. யந்திர வழிபாட்டின் அடிப்படையான ஸ்ரீசக்ர அதிதேவதைகள் அனைத்தும் இங்கு இருப்பது விசேஷம். கடவுளை உணர்வதற்கும், அடைவதற்கும் வழிபாடு அவசியமாகிறது. அவரவர் தகுதிக்கேற்ப, பிடித்தமான முறையில் கடவுளை வழிபடலாம். இத்தலத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இறைவனை நாம சங்கீர்த்தனம் (பக்திப்பாடல்) மூலம் வழிபாடு செய்யப்படுகிறது. ஏனெனில், நாம சங்கீர்த்தனம் தான் ஒருவரை இறைவனிடம் அழைத்து செல்கிறது.

பாண்டுரங்கன் சுமார் 12 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் மிக அழகாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு யந்திர வழிபாட்டில் முக்கியத்துவம் பெறும், ஸ்ரீசக்ரத்தின் அதி தேவதைகள் "மஹாசோடஷி' என்ற திருநாமத்தில் ஒரே வடிவில் அருள்பாலிக்கின்றனர். யந்திர வழிபாடான ஸ்ரீசக்ரத்திற்கு "மகா மேரு' அமைப்பை ஏற்படுத்தி பூஜை செய்வது மாபெரும் பலன் தரக்கூடியது. இந்த மகா மேரு தான் மகா சோடஷியாக இத்தலத்தில் விளங்குகிறது. ஸ்ரீ சக்ரத்தில் எத்தனை பிரிவு உள்ளதோ அத்தனை பிரிவிற்கும் உள்ள தெய்வங் களான "மகாசோடஷி, ராஜராஜேஸ்வரி, சரஸ்வதி, லட்சுமி, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசுவரன், விநாயகர், பாலா, அன்னபூரணி, அச்வாரூடா, ராஜமாதங்கி, வராஹி, பிரத்யங்கிரா, சரபேஸ்வரர், சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர், அகோரமூர்த்தி, வனதுர்க்கை, பராசரஸ்வதி, மேதாதட்சிணாமூர்த்தி, சுப்ரமணியர், சண்டிமகாலட்சுமி, பிராஹ்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, மாகேந்திரி, சாமுண்டா,மகாலட்சுமி ஆகியோர் இத்தலத்தில் விக்ரக வடிவில் இருப்பது மிகவும் விசேஷம்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).