🛕 Arulmigu Gengai Amman Temple

அருள்மிகு கங்கையம்மன் திருக்கோயில், Thiruvannamalai - 606601
🔱 Gengai Amman

📜 About this temple

தட்ச யாகத்திற்கு பின், அம்பிகையைப் பிரிந்த சிவன் பூலோகம் வந்தார். இதனால் உக்கிரத்துடன் இருந்த சிவனின் வெம்மையை, அவரது தலையில் இருந்த கங்காதேவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சிவனை சாந்தப்படுத்தும்படி அவள் மகாவிஷ்ணுவை வேண்ட, அவரும் அவ்வாறே செய்தார். மேலும், அவரது உக்கிரமான பார்வையால் எரிந்த பகுதிகளைச் சுற்றிலும் ஏழு நீர் நிலைகளை உண்டாக்கி அணைத்தார். இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் இங்கு பெருமாள், கங்காதேவிக்கு கோயில் கட்டினார். காலப்போக்கில் இக்கோயில்கள் மறைந்து போனது. தென்னாட்டுக் கோயில்களை அந்நியர்கள் ஆக்கிரமிப்பு செய்தபோது, குமாரகம்பணன் என்ற வடநாட்டு சிற்றரசர் படையெடுத்து சென்று அந்நியர்களை அழித்து, கோயில்களை மீட்டார். அவர் தென்னாடு வரும் வழியில், இவ்வூரில் தங்கினார். இப்பகுதியை ஆண்ட ராஜநாராயண சம்போராயர், குமாரகம்பணன் படையெடுத்து வந்ததாகக் கருதி அவருடன் போரிட்டார். போரில் கம்பணன் வென்றார். தோற்ற மன்னன் ராஜகம்பீர மலையில் ஒளிந்து கொண்டார். அப்போது, குமார கம்பணனின் மனைவி, இத்தலத்தின் மகிமையறிந்து கங்காதேவிக்கு கோயில் எழுப்பினாள். போரில் வென்ற குமார கம்பணர், ராஜநாராயண சம்போராயரை அழைத்து, நாட்டை திருப்பிக்கொடுத்தார். இதனால் "சேனைக்கு மீண்டான் வாசல்' என்று இவ்வூருக்கு பெயர் ஏற்பட்டது.

கங்காதேவிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தையே இங்கு பிரதான பிரசாதமாகத் தருகின்றனர். தண்ணீர் வடிவ தெய்வமான கங்கைக்கே, பூஜை செய்த தீர்த்தமென்பதால், இதை மிகவும் புனிதமானதாகக் கருதுகின்றனர்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).