🛕 Arulmigu Kanagirieswarar Temple

அருள்மிகு கனககிரீஸ்வரர் திருக்கோயில், தேவிகாபுரம் - 606902
🔱 Kanagirieswarar

📜 About this temple

ஒரு சமயம் அம்மையும் அப்பனும் கயிலை மால்வரையில் வீற்றிருக்கும்போது அங்கு வந்த பிருங்கி முனிவர் சக்தியை நீக்கி சிவனை மட்டும் வணங்கிச் சென்றார்.அதுகண்டு வருத்தமடைந்த அன்னை இறைவனை நோக்கி வணங்கி அய்யனே தங்களுடலில் சரி பாதியை எனக்கு வழங்கியருள வேண்டும் என்று வேண்டினாள். இறைவனும் சக்தியை நோக்கி, பெண்ணே நீ பூவுலகம் சென்று கச்சியம்பதியில்(காஞ்சிபுரம்) காமாட்சி என்ற பெயருடன் தவமிருந்து என்னை பூஜித்து வா. உரிய காலத்தில் உன்னை மணந்து கொள்வேன். பின்னர் திருவருணைக்கு (திருவண்ணாமலை) வந்து வழிபாடு செய்யும்போது உமக்கு இடப்பாகம் தருவேன் என்று உறுதியளித்தார். அவ்வண்ணமே அன்னை கச்சியம்பதி வந்து தவமிருந்து ஏகாம்பரநாதரை மணந்தார். பின்னர் திருவருணைக்கு செல்லும்போது வழியில் தேவிகாபுரத்தில் ஒரு மண்டலம் தங்கி இங்குள்ள கனககிரி நாதரை வணங்கி தவமிருந்தார்.அதனால் இத்தலம் தேவிகாபுரம் என்று பெயர் பெற்றது என்பர். பின்னர் திருவருணைக்கு சென்று இடப்பாகம் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்புரிகிறார். ஒரே கருவறையில் எங்கும் இல்லாதபடி இரண்டு லிங்கங்கள் உள்ளது. சிறப்பு : சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).