🛕 Arulmigu Malligarjunaswamy Temple

அருள்மிகு மல்லிகார்ஜீணசுவாமி திருக்கோயில், பருவதமலை குன்றின் மேல், தென்மகாதேவிமங்கலம் - 606906
🔱 Mallikarjuna Swamy

📜 About this temple

கி.பி. 3ம் நூற்றாண்டில் மாமன்னர் நன்னன் என்னும் அரசன் இங்கு வந்து இறைவனை வணங்கியதாக மலைபடுகடாம் என்னும் நூலில் வரலாற்றுச் சான்று உள்ளது.

26 கி.மீ., சுற்றளவுள்ள இந்த மலையை பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால் கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கன்னியாகுமரி போன்று இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும். சிவ பெருமானுக்கு கற்பூரம் ஏற்றி வெளியே நின்று கற்பூர ஜோதியை நோக்கினால் ஜோதியில் நாகம், சூலம், உடுக்கை போன்ற பிம்பங்கள் தோன்றுவதைக்காணலாம். மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம்

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).