🛕 Arulmigu Varadhaanjaneyar Temple

அருள்மிகு வரதஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில், செய்யார் - 604407
🔱 Varadhaanjaneyar

📜 About this temple

மலைகளும் வயல்களும் நிறைந்த இந்த ஊரில் வாழ்ந்த ஒரு தம்பதியருக்கு நீண்ட நாட்களாகவே குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. ஒருநாள் அவர்கள் வயல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கலப்பையில் ஏதோ தட்டுப்பட, அந்த இடத்தை தோண்டிப் பார்க்க, அங்கே அனுமன் சிலை இருந்ததைக் கண்டு வியந்தனர். பின்னர் அருகேயிருந்த சிறுகுன்றின்மேல் ஊர் மக்கள் உதவியுடன் அனுமனை பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். அடுத்த வருடமே அந்த தம்பதியருக்கு குழந்தை பிறந்தது. ஊரே அனுமனை கொண்டாடி மகிழ்ந்தது. அந்த அனுமனின் ஆற்றல் மெல்ல மெல்ல அக்கம் பக்கத்து ஊர்களுக்கும் பரவத் தொடங்கியது.

சிறு குன்றில் வீற்றிருந்து சேவை சாதிக்கும் வரத ஆஞ்சநேயரையும் எண்ணற்ற பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவது இத்தலத்தின் சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).