📜 About this temple
இவ்வுலகில் பிறந்த எல்லாரும், தங்களுக்கு மட்டுமே ஏதோ ஒரு வகையில் துன்பம் வருகிறது என எண்ணுகின்றனர். ஆனால், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி எல்லாரையும் துன்பம் ஆட்டி வைக்கிறது. பிறவி எடுத்தாலே துன்பம் தான் என்பது மாற்ற முடியாத உண்மை. இப்படித்தான், ஜல்லிகை என்ற பெண்மணியும் இப்பூமியில் அவதரித்தாள். பிறப்பால் அரக்க குலத்தவள் ஆயினும், அக்குணங்களை விடுத்து, சிவபக்தியில் சிறந்து விளங்கினாள். கருணை உள்ளம் வாய்ந்த அப்பெண்ணுக்கு விருபாட்சன் என்ற ராட்சஷன் கணவனாக அமைந்தான். அவன் மனிதர்களையே உண்பவன். ஜல்லிகையோ, சாத்வீக உணவு உண்பவள். கணவனின் குணத்தை அவளால் மாற்ற முடியவில்லை. ஒருமுறை, ஒரு அந்தணச்சிறுவன் மறைந்த தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய கங்கைக்கு சென்று கொண்டிருந்தான். அவனைப் பிடித்த விருபாட்சன், அவனை விழுங்க முயன்றான். ஜல்லிகை தடுத்தாள். அந்தணர்களை விழுங்கினால் அவ்வுணவே விஷமாகும் என எச்சரித்தாள். கேட்க மறுத்த விருபாட்சன், ஜல்லிகையை உதைத்தான். அவளை கீழே பிடித்து தள்ளிவிட்டு, சிறுவனை விழுங்கி விட்டான். சற்றுநேரத்தில் அவ்வுணவு விஷமாக மாறியது. விருபாட்சன் இறந்தான். ஜல்லிகை திருத்துறைப்பூண்டி தலத்தில் வில்வமரங்களின் மத்தியில் எழுந்தருளியிருந்த சிவனை வணங்கி, ""இறைவா! என் கணவன் நல்லவன் அல்ல, இருப்பினும் அவனின்றி நான் வாழேன். அரக்க குணத்தை மாற்றி, இரக்க குணமுள்ளவர்களையே இவ்வுலகில் பிறக்கச் செய். இல்லையேல், பிறவியிலிருந்து விடுதலை கொடு,'' என வேண்டினாள். பலநாட்கள் பட்டினியாய் கிடந்து உயிர் போகும் நிலையில், இறைவனின் துணைவியான பிரகன்நாயகி காட்சியளித்தாள். ""மகளே! நீ இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி வா,'' என்றாள். அவ்வாறு நீராடி வரவும், எதிரே அவளது கணவன் விருபாட்சன் வந்தான். அவனுக்கு அம்பிகை உயிர் கொடுத்துவிட்டாள். அத்துடன், அவன் வயிற்றில் கிடந்த அந்தணச்சிறுவனையும் எழுப்பினாள். அவன் அன்னையின் தரிசனம் கண்டான். ""அம்மா! நான் என் வழியே போய்க்கொண்டிருந்தேன். இடையில் இவன் என்னை விழுங்கினான். விதி முடிந்த என்னை உயிர்ப்பித்த காரணம் என்ன?'' என்றான். அவனிடம் அம்பிகை, ""மகனே! தந்தை இறந்த பிறகும், எவன் ஒருவன் அவரை மறவாமல், தினமும் ஆத்மார்த்தமாக வணங்குகிறானோ, ஆண்டுதோறும் அவருக்கு சிரார்த்தம் செய்கிறானோ அவன் எத்தகைய ஆபத்தில் இருந்தும் தப்பிக்கிறான். அவனுக்கு என்னருள் நிச்சயம் உண்டு. அது மட்டுமின்ற
இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர். இங்கு மரகத லிங்கம் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).