🛕 Arulmigu Vadampoki Vinayagar Temple

அருள்மிகு வடம்போக்கி விநாயகர் திருக்கோயில், திருவாஞ்சியம், நன்னிலம் - 610107
🔱 Vadampoki Vinayagar

📜 About this temple

திருவாரூரில் கோயில் அமைத்து தியாகராஜரை இந்திரலோகத்தில் இருந்து முசுகுந்த சக்கரவர்த்தி எடுத்து வர முற்பட்டுள்ளார். அதற்கு முன்பாக இப்பகுதியில் விநாயகரை கோயில் கொண்டு வழிபாடு நடத்தியுள்ளார். அதன்பின் முசுகுந்த சக்கரவர்த்தி, இந்திரலோகம் சென்றபோது, இந்திரன் தியாக ராஜரை தர மறுத்துள்ளார். மேலும் தியாகராஜர்போன்று ஏழு உருவம் அமைத்துள்ளார். அப்போது முசுகுந்த சக்கரவர்த்தி வழிபட்ட வலம்புரி விநாயகர் வண்டு உருவம் பெற்று உண்மையான தியாகராஜர் அருகே சென்று வட்டமிட்டுள்ளார். அதன் பின் முசுகுந்த சக்கரவர்த்தி உண்மையான தியாகராஜரை அடையாளம் கண்டு எடுத்து வந்தார் என்பது வரலாறு. அதன் மையமாக வலம்புரி விநாயகருக்கு கோயில் அமைத்துள்ளனர். அதன் பின் வேண்டுதல் நிறைவேறி வந்துள்ளது. மேலும் இக்கோயில் பிள் ளையார்பட்டி போன்று மூலவரான வலம்புரி விநாயகர் (ஈசன்) சிவலிங்கம் வடிவில் வரையப்பட்ட ஓவியம் போன்று உள்ளார். இப்பகுதியில் விநாயகருக்கு கோயில் கட்ட முற்பட்டபோது பூமிக்கடியில் இருந்து லிங்கம், நந்தி, பாலமுருகன், பிரம்ம உள்ளிட்ட விக்கிரகங்கள் கண்டெடுக்கப்பட்டு கோயிலில் பிரதிஷட்டை செய்துள்ளனர். இக்கோயில் சோழவளநாட்டின் சைவ சமயத்தின் தலைமை பீடமான திருவா ரூருக்கும் மேற்கே 13 கி.மீ.,தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சோழ மன்னர்கள் கட்டிய சிவத்தலம் அழிந்துள்ளதும் இங்குள்ள விக்கிரகங்களில் இருந்து தெரிய வருகிறது.

முசுகுந்த சக்கரவர்த்தி வழிபட்ட விநாயகர் கோயில் என்பதால் சுற்றுபகுதியினர் பயபக்தியுடன் வழிபாடு நடத்தி வருகின்றனர் என்பது சிறப்புக்குரியவையாகும்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).