📜 About this temple
பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த காலத்தில் மின்னூர் காட்டுக்கு வந்தனர். தர்மருக்கு பசித்தது. பீமனிடம் உணவு கொண்டுவரக் கூறினார். எங்கு தேடியும் உணவு கிடைக்கவில்லை. சோர்வடைந்த பீமன், சிவலிங்கம் ஒன்றைக் கண்டான். சுவாமியிடம் உணவளிக்க வேண்டினான். பீமனுக்கும் அவருடைய சகோதரர்களுக்கும் பால் கிடைக்க சுவாமி அருள்பாலித்தார். தங்களுக்கு உணவு அளித்தது போல், அவரை வழிபடும் அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்று பாண்டவர்கள் வரம் கேட்டனர். சுவாமியும் அருள் பாலித்தார். பீமனின் பெயரால் இவர்பீமேஸ்வரர் எனப்பட்டார். இவரை வழிபடுபவர்களுக்கு உணவு பஞ்சமே வராது என்பது நம்பிக்கை. ஏகாதச ருத்ரர்களில் ஒருவரான பீமனும், திருக்கயிலாயத்தில் நிருதி (தென் மேற்கு) திசையின் காவலனாக விளங்கக் கூடிய பீமநாதனும் வணங்கியதாலும் இறைவனுக்கு பீமேஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டதாக ஒரு கருத்து உள்ளது. பீமனின் பசிக்கு பால் அளித்ததால் அம்பாள் பாலாம்பிகை எனப்பட்டாள். பாண்டவர்கள் வனவாசம் வந்த மின்னூர் காட்டுப்பகுதியே இப்போது திண்டிவனம் எனப்படுகிறது.-
சதுரமான கருவறையின் நடுவில் 6 அடி உயரத்தில் மூலவர் பீமேஸ்வரர் பிரம்மாண்டமாக மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது சிறப்பானதாகும்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).