🛕 Arulmigu Kotteeswarar Temple

அருள்மிகு கோட்டீஸ்வரசுவாமி திருக்கோயில், பெருவளூர் - 604208
🔱 Kotteeswarar

📜 About this temple

மாமன்னன் இராஜராஜ சோழன் வியந்து, வணங்கி, திருப்பணிகள் செய்து, நிவந்தங்கள் கொடுத்து இங்குள்ள நிதீஸ்வரரை வழிபட்டுள்ளான். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாய்ந்த இக்கோயில். பிரம்மன் வழிபட்ட தலம்: அன்னமூர்த்தி, அன்னவாகனன் என்று அழைக்கப்படும் படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும், காக்கும் கடவுளாகிய திருமாலும் இருவருமே தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு கயிலைநாதனிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க சிவபெருமான் அடியை முடியை யார் கண்டு வருகிறார்களோ அவர்தான் பெரியவர் எனக்கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக் காண புறப்பட்டுத் தேடி தன் இயலாமையை இறைவனிடம் தெரிவித்து நின்றார். பிரம்மன் அன்னமாய் பறந்து சென்று முடியைக் கண்டதாக பொய்யுரை கூறி நின்றார். பொய் உரைத்ததால் பிரம்மனை சிவபெருமான் அன்னமாகும்படி சபித்தார். தனக்கு ஏற்பட்ட இழுக்கு தீர பிரம்மதேவன் இத்தலத்தை அடைந்து பொய்கை ஒன்றை உருவாக்கி அதன் நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து பல ஆண்டுகள் வழிபட்டு அன்ன உருவம் நீங்கி படைப்புத் தொழிலை மேற்கொண்டார். இதனால் இத்தலத்திற்கு அன்னம்புத்தூர் என்ற திருநாமம் ஏற்பட்டு உள்ளது. இத்தலத்தில் நான்முகன் வழிபட்டதற்கு ஆதாரமாக புராதனமான செல்லியம்மன் திருக்கோயிலில் பிரம்மாவுக்கு திருவுருவச்சிலை காணப்படுவது வேறு எங்கும் காண முடியாத அரிய தரிசனமாகும். பதுமநிதி, மகாபதுமநிதி, மகா நிதி, கச்சபநிதி, முகுந்தநிதி, குந்த நிதி, நீல நிதி, மற்றும் சங்க நிதி போன்ற எட்டு வகையான நிதிச்செல்வங்களுக்குத் தலைவன் குபேரன். இச்செல்வங்களுக்குத் தலைவனாக விளங்குவதால் நிதிபதி என்று போற்றி வணங்கப்படுபவன். தனக்கு எப்போதும் அள்ள அள்ளக் குறையாø செல்வங்களை வழங்கவேண்டும் என இத்தலத்தின் ஈசனை, குபேரன் வழிபட்டு நீங்காத செல்வம் நிலைக்கப்பெறும் பேறினைப் பெற்றதால் இறைவனுக்கு நிதீஸ்வரர் எனும் திருநாமம் ஏற்பட்டுள்ளதைக் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகின்றது. குபேரன் வழிபட்ட தலம்: எட்டு வகையான நிதிச்செல்வங்களுக்குத் தலைவன் குபேரன். இச்செல்வங்களுக்குத் தலைவனாக விளங்குவதால் நிதிபதி என்று போற்றி வணங்கப்படுபவன். தனக்கு எப்போதும் அள்ள அள்ளக் குறையாத செல்வங்களை வழங்கவேண்டும் என இத்தலத்தின் ஈசனை, குபேரன் வழிபட்டு நீங்காத செல்வம் நிலைக்கப்பெறும் பேறினைப் பெற்றதால் இறைவனுக்கு நிதீஸ்வரர் எனும் திருநாமம் ஏற்பட்டுள்ளதைக் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகின்றது.

குபேரன் தனக்கு நிதி வேண்டி வணங்கிய தலங்களில் இதுவும் ஒன்று என்பதும், தலையெழுத்தை எழுதும் பிரம்மனின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய சிவனார் வீற்றிருக்கும் தலம் என்பதும் தலத்தின் சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. இத்தலத்தில் பிரம்மாவுக்கு திருவுருவச்சிலை காணப்படுவது வேறு எங்கும் காண முடியாத அரிய தரிசனமாகும்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).