🛕 Arulmigu Prasannavengachalapathi Temple

அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில், சின்னபாபு சமுத்திரம் - 605102
🔱 Prasannavengachalapathi

📜 About this temple

இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னனின் மனைவி தன் முன்வினைப்பயனால், தீராத தோல் வியாதியால் பாதிக்கப் பட்டாள். எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் வியாதி குணமாகவில்லை. அவளது நோய் அதிகமாகி, அழகு மங்கியது. எனவே மன்னனுக்கு மனைவி மீதிருந்த அன்பு கொஞ்சம், கொஞ்சமாக மறையத்துவங்கியது. ஒருகட்டத்தில் அவளை வெறுத்து ஒதுக்கிய அவன், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்தான். கணவனின் எண்ணத்தை அறிந்த மனைவி மிகவும் வருந்தினாள். தனது நோய் நீங்கவும், கணவனின் எண்ணத்தை மாற்றவும் வேண்டி இத்தலத்தில் பெருமாளை வேண்டினாள். அவளது பக்தியில் மகிழ்ந்த பெருமாள் வியாதியை நீக்கி அருளியதோடு, அவளை முன்பிருந்ததைவிட மேலும் அழகாக மாற்றினார். மன்னனுக்கும் நற்புத்தி கொடுத்தார். மன்னனும், வேறு திருமணம் முடிக்கும் எண்ணத்தை விட்டு, தன் மனைவியுடன் இல்லறம் நடத்தினான்.

மகான்கள் ஐக்கியமான தலங்கள் பிருந்தாவனம் என்று அழைக்கப்படும். அதில் ராமானுஜர் ஐக்கியமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் விசேஷமான தலமாக இருக்கிறது. அதேபோல்இக்கோயிலில் அஹோபில மடத்தின் 36வது பட்டம் ஜீயர் அழகியசிங்கர், வண்சடகோப ஸ்ரீனிவாச மஹாதேசிகன் சுவாமிகளின் ஜீவ பிருந்தாவனம் உள்ளது. ஆவணி 7 முதல் 12 வரை சூரிய ஒளிக்கதிர் பெருமாளின் பாதத்தில் பட்டு சூரிய வழிபாடு நடக்கிறது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).