🛕 Arulmigu Varadharaja Perumal Temple

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், கோலியனுர் - 605103
🔱 Varadaraja Perumal

📜 About this temple

கி.பி. 15ம் நூற்றாண்டில் கச்சியராயன் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்த பகுதி, அவன் பெயராலேயே கச்சிராய பாளையம் என்று அழைக்கப்பெற்று, தற்போது கச்சிராப்பாளையம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் மையப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள அழகிய மலைக்குன்றின் மேல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தென்பகுதியை ஒட்டி கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கோமுகி என்கிற புண்ணிய நதி ஓடுவது சிறப்பானது. அருள்ஞான சித்தரும், தில்லை அருள் ஜோதிலிங்க சுவாமிகளும் வாழ்ந்து அருளாசி புரிந்த ஞானமலைக் குன்று இதுவாகும். வள்ளலார் வாழ்ந்த புண்ணிய பூமியான வடலூரில் உள்ள சத்திய ஞானசபையில் ஆசிரமம் அமைத்து சமாதி நிலையை அடைந்தார் ஜோதிலிங்க சுவாமிகள் இப்போதும் அங்கே கச்சிராயப்பாளையம் சுவாமிகள் என்றே அழைக்கப்படுகிறார். இக்கோயிலை ஆய்வு செய்தவர்கள் முற்காலத்தில் இப்பகுதியில் அரசாட்சி செய்த முஷ்குந்த சக்கரவர்த்தியால் இக்கோயில் கட்டப்பட்டு பின்னர் நாயக்க மன்னர்களாலும் அதன்பிறகு கச்சிராய மன்னனாலும் புனரமைக்கப்பட்டு, நித்திய கால பூஜைக்கு பல ஏக்கர் நிலங்களும், வெகுமதிப்புள்ள பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாக கல்வெட்டுச் சான்றுகள் மூலம் கூறுகின்றனர்.

பொதுவாக பல கோயில்களில் பெருமாளின் வலதுகரம் மேலுயர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போல் இருக்கும். ஆனால், இங்கு பெருமாள் மாறுபட்டு, தனது வலது திருக்கரத்தை பூமியை நோக்கி நீட்டிய வண்ணம், திருப்பதியைப் போல் அருள்பாலிப்பது தனி சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).