📜 About this temple
வத்திராயிருப்பு பகுதியை புராணகாலத்தில் தர்மாரண்ய சேத்திரம் என்று அழைத்தனர்.இங்குள்ள மலைப்பகுதி "தர்மாத்ரி' என்று குறிக்கப்படுகிறது. அர்ஜுனன் தீர்த்தயாத்திரை செய்தபோது, இப்பகுதிமக்கள் வறட்சியால் நீரின்றி தவித்ததைக் கண்டு வருந்தினார். உடனே, தன் வில்லை எடுத்து பூமியை நோக்கி அம்பு தொடுத்தார்.அந்த இடத்தில் அழகிய பொய்கை உருவானது. அப்பொய்கை அர்ஜுன பொய்கை என்றும், அங்கிருந்து உற்பத்தியான நதி ""அர்ஜுனாநதி'' என்றும் பெயர் பெற்றது. ரிஷிகளிடம் ஸ்ரீதேவியான லட்சுமி தாயார், ""பூலோகத்தில் தவம் செய்வதற்கு சிறந்த இடம் எது?'' என்று கேட்டாள். அவர்கள் இத்தலத்தைப் பற்றி சொன்னதும், அங்கு வந்தாள்.இடத்தைப் பார்த்தவுடனேயே அவள் முகம் மலர்ந்தது. "லட்சுமி முகம் மலர்ந்த இடம்' என்பதால் ""ஸ்ரீவக்தரம்'' (திருமகள் திருமுகம்) என்னும் பொருளில் இத்தலம் அழைக்கப்பட்டுவந்தது. பின்னாளில் ""ஸ்ரீ வக்த்ரபுரம்'' என்றாகி வத்திராயிருப்பு என்று மருவியதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீதேவி தாயார் இவ்வூரில் தவம் செய்து, திருத்தங்கல் என்னும் திருத்தலத்தில் மகாவிஷ்ணுவை திருமணம் செய்ததாக பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.
மூலவர் அழகிய சாந்த மணவாளப்பெருமாள் சங்கு சக்கரம் ஏந்தி கிழக்கு நோக்கியுள்ளார். ஒரு கை அபய ஹஸ்தமாகவும், மற்றொரு கை கதாயுதத்தை பிடித்தநிலையிலும் இருப்பது சிறப்பு. இங்கு இரண்டு கருடாழ்வார்கள் உள்ளனர். ஒருவர் பெருமாளை சுமந்து புறப்பட தயார் நிலையில் நின்ற கோலத்திலும், மற்றொருவர் பெருமாளை வணங்கிய நிலையில் அமர்ந்த கோலத்திலும் இருப்பது மற்றொரு சிறப்பு.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).