📜 About this temple
சரசரவென விழுந்துகொண்டிருந்த அருவி நீரில், ஆனந்தமாகக் குளித்தது அந்தத் தவளை. பிறகு, ஈரம் சொட்டச் சொட்டக் கரைக்கு வந்து, அங்கேயிருந்த பாறையில் அமர்ந்து கொண்டது; மெள்ளக் கண்கள் மூடியது. உள்ளே... ஸ்ரீமந் நாராயணனின் திருநாமத்தை உச்சரித்தபடி, அவருடைய திவ்வியமான திருமுகத்தையும் திருவடியையும் நினைத்து தவத்தில் மூழ்கியது. சுதாபனாக இருந்தபோது, இதே அருவியில் குளித்துக்கொண்டே, உன் நினைப்பில் மூழ்கிவிட்டேன். நான் என்ன செய்கிறேன், எங்கே இருக்கிறேன் என்று எதுவுமே நினைவில் இல்லை. இதோ... அருவிகளும் பாறைகளும் சூழ்ந்திருக்கும் இந்தப் பகுதியில், உன்னையே நினைந்து அனுதினமும் தவமும் பூஜையுமாக இருந்து வருவது, உனக்குத் தெரியாதது அல்ல. அப்போது உன் திருவடியில் இடம் கேட்டுத் தவம் செய்து வந்தேன். இப்போது, துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து விமோசனம் வேண்டும் என்று தவமிருக்கிறேன். என்னை ஆட்கொள்வாயா, இறைவா ?! என்று பிரார்த்தனை செய்தது அந்தத் தவளை. அழகிய வனம்; அதைச் சுற்றிலும் பாறைகள்; மலைகள். வனத்தில் பொலபொலவென விழுந்துகொண்டே இருக்கும் அருவி. ஸ்ரீமந் நாராயணனான உன்னை வழிபடுவதற்கு ஏற்ற இடம் இது என அறிந்து உணர்ந்து, இங்கு ஆஸ்ரமம் அமைத்து அனவரதமும் உன்னையே நினைத்து வந்தேன். வனத்தின் வனப்பு குறித்து துர்வாச முனிவருக்கு எவரோ சொன்னார்களாம்; தேடிக் கண்டுபிடித்து இங்கு வந்துவிட்டார். நீராடிவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லி, அவரை ஆஸ்ரமத்தில் அமரச் செய்துவிட்டு, அருவியில் நீராடுவதற்காக வந்துவிட்டேன். நாசியில் துளைத்தெடுத்த செண்பக மலர்களின் வாசனைகளாலும் அருவி நீரில் கலந்திருந்த மூலிகையின் நறுமணத்தாலும் மகிழ்ச்சியில் திளைத்தேன். எல்லாவற்றுக்கும் மேலாக, மனத்தை மலரச் செய்யும் உன்னுடைய திருநாமத்தைச் சொல்லத் துவங்கியதும், என்னையே நான் மறந்தேன். என் ஐயனே ! இது குற்றமா? இதோ வருகிறேன் என்று சொல்லிச் சென்ற என்னை வெகு நேரம் காணாததால் கோபமாகிவிட்டார் துர்வாச முனிவர். நான் ஆஸ்ரமத்துக்குச் சென்றதும், அவர் கடும் கோபத்துடன் என்னைப் பார்த்து, தவளைதான் தண்ணீரிலேயே கிடக்கும். நீ மனுஷனா அல்லது தவளையா? நான் உனக்காகக் காத்திருப்பதை மறந்து, தண்ணீரில் ஆட்டம் போட்டுவிட்டு, ஆற அமர வருகிறாய் என்றால், என்னை இளப்பமாக நினைக்கிறாய் என்றுதானே அர்த்தம்? உனக்கு எதற்கு இந்த ஆஸ்ரமம்? நீ தவளையாகவே மாறி, தண்ணீரிலேயே ஆனந்தமாக இரு என்று சாபமிட்
பொதுவாக பெருமாள் கோயில்களில் சந்தான கிருஷ்ணன், ஒரு சிறு குழந்தை வடிவில் உற்சவருக்கு அருகில் இருப்பார். ஆனால் இங்கு பாமா, ருக்மணியுடன் மூலஸ்தானத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).