📜 About this temple
முன்னொரு காலத்தில் சிவநேசி என்ற பெண் சிவன் கோயில் வழியாக தன் தாய் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தாள். சிவநேசிக்கு அது பேறுகால சமயம். நடந்து சென்று கொண்டிருக்கும் போதே அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டாள். அங்கிருந்த சிவன் கோயில் வாசலில் அமர்ந்து அழுது புரண்டாள். இந்த துன்பத்தை கண்ட கருணை வடிவான சிவன் தானே அந்த பெண்ணின் தாய் உருவில் வந்து புத்திரப்பேறு உதவினார். அத்துடன் குழந்தையை பெற்ற பெண்ணின் தாகம் தீர காயல்குடி நதியை வரவழைத்து அதன் நீரை மருந்தாக பருகவும் உதவினார். (இந்த நதியே தற்போது இந்தக் கோயிலின் தீர்த்தமாக உள்ளது) தன் பெண்ணின் பிரசவ செய்தியை கேள்விப் பட்ட தாய், சிவனே தன் உருவில் தாயாக வந்து பிரசவம் பார்த்ததை அறிந்து இறைவனை நினைத்து வழிபட்ட போது, சிவன் உமையவள் சமேதராய் காட்சி கொடுத்து அருள்பாலித்தார். ஒரு பெண் பிரசவ வலியால் துடித்த போது, அருகில் யாருமில்லாத நிலையில், சிவபெருமானே மருத்துவச்சியாக மாறி அவளுக்குப் பிரசவம் பார்த்த அதிசயம் நிகழ்த்திருக்கிறது. அந்த இடம், பெத்தவநல்லூர். அந்த சம்பவத்தை முதலில் பார்த்துவிடுவோம். ராஜபாளையம் அருகே தீவிர சிவபக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைப் போலவே அவரது மனைவி சிநேசியும் சிவனையே நேசித்து பூசித்து வந்தாள். நிறைமாத கர்ப்பிணியான அவள், சற்று தொலைவில் குன்றைவூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு தலைப்பிரசவத்திற்காக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள். தற்போது பெத்தவநல்லூர் என்று அழைக்கப்படும் இடத்தை நெருங்கியபோது, திடீரென்று அவளுக்குப் பிரசவ வலி தொடங்கியது. வலி தாங்காமல் இடுப்பைப் பிடித்தவாறு, அம்மா என்று அலறியபடி மங்கிக் கீழே விழுந்தாள் அவள். ஆள் நடமாட்டம் இல்லாத இடமென்பதால் அவளது அபயக் குரல் மற்றவருக்குக் கேட்கவில்லை. என்றாலும், நீக்கமற எங்கும் நிறைந்தவரான சிவபெருமானுக்குக் கேட்டது. அவளது நிலை கண்டு மணமிரங்கிய மகேசன். அவளது தாயார் கோலத்தில், மருத்துவச்சியாக வடிவெடுத்து வந்து சிவநேசிக்கு உதவினார். பிரசவம் நல்லபடியாக முடிந்தது. அவள் தாகத்தால் வருந்தியபோது, இறைவன் தன் திருவடி பெருவிரல் நகத்தால் தரையைக் கீற, அந்த இடத்தில் நதி ஒன்று உருவானது. அதிலிருந்து நீரைப் பருகி தாகம் தணித்துக்கொண்டாள் சிவநேசி. சட்டென்று மறைந்துபோனார் சர்வேஸ்வரன். அந்த சமயம் பார்த்து, வீட்டிற்கு வருவதாகச் சொன்ன மகள் இன்னும் வரவில்லையே என்ற ப
மிகவும் பழமையான இந்தக் கோயில் ஓர் பிரார்த்தனை ஸ்தலமாகும். குழந்தைப் பெறப் போகும் தாய்மார்கள் இக்கோயிலுக்கு வந்து மாயூரநாதரை வேண்டிக் கொண்டால், சிவநேசி என்ற பெண்ணுக்கு புத்திரப்பேறு பெற உதவியது போல் அனைத்து தாய்மார்களுக்கும் தானே உதவிடுவார்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).