📜 About this temple
பூலோகத்தில் காத்யாயன மகரிஷி, பார்வதிதேவி தனக்கு மகளாகப் பிறக்கவேண்டும் என தவமிருந்தார். சிவனது கண்களைப் பொத்தியதால் வந்த அபவாதம் நீங்க தவம் புரிய விரும்பிய தேவி, இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவருக்கு மகளாகப் பிறந்தார். முனிவர் அவளுக்கு காத்யாயனி எனப் பெயர் சூட்டினார். காத்யாயனி அழகு நிறைந்தவளாக அன்போடும், கருணையும் கொண்டவளாக வளர்ந்தாள். ஒருசமயம் காசி மாநகரில் பஞ்சம் தலைவிரித்தாடியது. செய்தியறிந்த காத்யாயினி, தந்தையிடம் காசிக்குச் சென்று பசித்துன்பத்திலிருந்து உயிர்களைக் காப்பாற்ற விரும்புவதாகக் கூறி புறப்பட்டுச் சென்றாள். காசியை அடைந்து, பசியால் வாடும் மக்களைக் கண்ணுற்று மனம் வருந்தினாள். தன் தெய்வீக சக்தியால் ஒரு மாளிகையை உருவாக்கி அள்ள அள்ளக் குறையாத ஓர் அட்சய பாத்திரத்தையும், தங்க கரண்டியையும் படைத்து அன்னபூரணியாக காட்சி தந்தாள். பசியால் வாடிய மக்களுக்கு உணவிட்டாள். காசி மன்னன் நேரில் வந்து வணங்கி அன்னபூரணியை அரண்மனைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். தேவி தன் சுயரூபத்தைக் காட்டி, நீ மக்களிடம் காட்டும் அன்பு தூய்மையானது. இனி மழை பெய்யும். பஞ்சம் நீங்கி உன் நாடு வளம் பெறும். கவலை வேண்டாம் என வாழ்த்தி தவம் மேற்கொள்ளச் செல்வதாக கூறினாள். மன்னன் அதிர்ச்சியடைந்து, தாங்கள் இங்கிருந்து சென்றாலும், தங்களின் தெய்வீக சாந்நித்யம் நிரந்தரமாக என்றென்றும் இருக்க அருள்புரிய வேண்டும் என வேண்டினார். உன் விருப்பம் போல் நான் அன்னபூரணியாக வீற்றிருந்து வேண்டுவோர்க்கு வேண்டியதை அளித்து அருள்புரிந்து வருவேன் என ஆசியளித்தாள். அதுபோலவே இன்றும் காசிமாநகரில் அன்னபூரணியாக இருந்து கோடிக்கணக்கானவர்களுக்கு அன்னமும் அருளாசியும் வழங்கி வருகிறாள். இவ்வளவு பெருமைமிக்க அன்னபூரணிக்கு கோவை மாநகரில் ஒரு கோயில் அமைந்துள்ளது. தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை
இத்தலத்தில் நவகிரகங்களுக்கு சன்னதி கிடையாது. ஆனால் நவகிரகங்களுக்குரிய விருட்சங்களும், 12 ராசிகளுக்குரிய விருட்சங்களும் உள்ளன. ராசி, நவகிரஹங்களின் பெயர் விருட்சங்களின் பெயர் அடங்கிய அறிவிப்பு பலகை உள்ளதை வேறு எந்த தலத்திலும் காணமுடியாத ஒன்றாகும்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).