📜 About this temple
சுமார் 12 நூற்றாண்டுகளுக்கு முன், ஆதி சங்கரர் சிருங்கேரியில் துங்கபத்ரா நதிக்கரையில் மடமும், கோயிலும் எழுப்பி சாரதாதேவியை பிரதிஷ்டை செய்தார். காலப்போக்கில் புகழ்பெற்று விளங்கிய அந்தக் கோயிலுக்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வரத் தொடங்கினர். சில வருடங்களுக்கு முன்பு, கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சிருங்கேரி சாரதா பீடத்திற்குச் சென்றார். அங்கு அபினவ வித்யா தீர்த்த மகா சுவாமியைச் சந்தித்து ஆசி பெற்ற பின், கோவையில் சாரதாம்பாள் கோயில் ஒன்றைக் கட்ட விரும்புவதாகத் தெரிவித்தார். அதே சமயத்தில் சூலூரைச் சேர்ந்த நஞ்சுண்டையர் என்ற பக்தர் ஒருவரும் சுவாமியிடம் ஆசி பெற வந்தார். அவரிடம் கோவையில் சாரதாம்பாள் கோயில் கட்ட ஓர் இடம் தேவை என சுவாமிகள் கேட்டார். அடுத்தநாளே தனது சகோதரருடன் மகா சுவாமிகளைச் சந்தித்த அவர், கோவையின் முக்கிய பகுதியாகத் திகழும் ரேஸ்கோர்ஸ் சாலையில் ஒரு ஏக்கர் நிலத்தை சாரதாதேவிக்கு கோயில் கட்ட வழங்குவதாகத் தெரிவித்தார். பக்தர்களின் ஒத்துழைப்புடன் கோயில் விரைவில் உருவானது. கட்டுமான செலவுகள் அனைத்தையும் கோவை தொழிலதிபர் ஏற்றுக் கொண்டார். 1979-ம் ஆண்டு கார்த்திகை மாதம் தேய்பிறை சஷ்டி தினத்தில் சாரதாதேவி கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
சிருங்கேரி மடத்தில் உள்ள சாரதாம்பாள் கோயிலில் நடக்கும் பூஜை முறைகள் போன்றே இங்கும் நடைபெறுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).