📜 About this temple
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அல்லல்படும் மனித இனத்தின் மீது கருணை கொண்ட நாராயணன், சீனிவாசன் என்ற திருநாமம் கொண்டு மனித வடிவில் பூவுலகிற்கு வந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் தங்கினார்.தாமிரபரணியில் குடிகொண்ட அவரை அறிந்து கொண்ட முனிவர்கள், மகரிஷிகள், சித்தர்கள், மகாபுருஷர்கள் என அனைவரும் அவரைத் துதித்து வணங்கி வந்தனர். அவர்களில் சன்னியாசி ஒருவர் இருந்தார். அவருக்கு, சுவாமியின் மனிதரூப காலம் முடிந்து விட்டால், மனித குலம் நற்பயன்கள் பெறமுடியாத சூழல் வந்து விடுமோ?' என்ற பயம் எற்பட்டது. எனவே, நாராயணனை நோக்கி தவம் புரிந்தார். அவரது, குரலுக்கு செவிசாய்த்த நாராயணர், அருட்காட்சி தந்தார். அவ்விடத்திலேயே கோயில் கொண்டு மக்களைக் காப்பதாகக் கூறி அருளினார்.இவ்வாறு, சன்னியாசியின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நாராயணர் இத்தலத்தில் வீற்றிருந்து கல்யாண சீனிவாசர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். இந்த இடத்துக்கும் சன்னியாசி கிராமம் என்ற பெயர் ஏற்பட்டது.
இத்தலத்தில் அருள்புரியும் வெங்கடாஜலபதி திருப்பதியில் இருப்பதைப்போலவே தோற்றம் கொண்டுள்ளார். இதனால், இத்தலம் "தென்திருப்பதி' என்ற சிறப்பு பெயர் பெற்றுள்ளது. சுவாமி தனது வலது மார்பில் ஸ்ரீதேவி, இடது மார்பில் பூதேவி ஆகியோரைத் தாங்கியபடி, கையில் சங்கு, சக்கரம் கொண்டு, இடுப்பில் சந்திரவம்ச உடைவாளுடன் கூடிய ஒட்டியாணம், மேனியில் சப்தகிரி, லட்சுமி, துளசி, தாமரை, செண்பக மாலைகள் அணிந்து, திருப்பாதத்தில் தண்டை, கொலுசு அணிந்த அற்புத கோலத்தில் அருட்காட்சி தருகிறார்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).